search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு அலுவலகம்"

    • மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    உதவித்தொகை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 10-ம் வகுப்பில் தோல்வி யுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    வங்கி கணக்கில்....

    இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும்.

    எஸ்.சி., எஸ்.சி. (ஏ), எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., ஓ.சி. பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி விண்ணப் பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாத வராக இருக்க வேண்டும்.

    வயது உச்ச வரம்பு

    மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்த வர்களுக்கு மாதம் ரூ. 600- பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

    அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்ற வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது . எனி லும், தொலை தூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    அடையாள அட்டை

    தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது), மற்றும் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் மூலம் பெறப் பட்ட 'பிரிண்ட் அவுட்கள்' போன்ற வற்றுடன் அலு வலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்ப கத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தின் மூலமா கவும் பொது, மாற்றுத்திற னாளிகள் அவர்க ளுக்குரிய விண்ண ப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப் பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்க ப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றம் வருவாய் ஆய்வாளர் அவர்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலை வாய்ப்பு அடையாள அட்டை (பழையது மற்றும் ஆன்லைன் பிரிண்ட் அவுட்), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சா ன்றிதழ் (டி.சி), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கு 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 98 ஆயிரத்து 879; பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 680; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என மொத்தம் 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 பேராகும்.

    அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601 பேர்.

    46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 391 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை வேலைவாய்ப்புத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத் துணை இயக்குநர் அருணகிரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது:-காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    மாதிரித் தேர்வு கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.

    • தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறுபவர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
    • கடந்த பிப்ரவரி 28-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறுபவர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

    18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 74 ஆயிரத்து 522 பேரும்; 19 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேரும்; 31 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 217 பேரும்;

    46 முதல் 60 வயதுள்ளவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேரும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 811 பேரும் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர்.

    அவர்களில் பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 996 பேர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 826 பேராகும். என்ஜினீயரிங் பட்டதாரிகள் 2 லட்சத்து 92 ஆயிரத்து 396 பேர், என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரிகள் 2 லட்சத்து 58 ஆயிரத்து 662 பேர்.

    ஆக மொத்தம் தமிழகத்தில் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 பேர் பெயர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது. இவர்களில் 31 லட்சத்து 47 ஆயிரத்து 605 பேர் ஆண்கள். 36 லட்சத்து 7 ஆயிரத்து 589 பேர் பெண்கள். 272 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

    ×