search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் வலியுறுத்தல்"

    • உய்யக்கொண்டான், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாக டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    தஞ்சாவூர்,:

    தஞ்சையில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ( பொ) பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    அப்போது விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த செயல்களால் தமிழகத்திற்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளது.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்கு உரிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன.

    இதனால் அடுத்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

    இதேபோல் பயிர் காப்பீடு திட்டத்தை தொடங்க வேண்டும். உய்யக்கொண்டான் ,புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மின்சாரம், உர தட்டுப்பாடு இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாகடன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

    எனவே வருகிற 25ஆம் தேதி முதல் -அமைச்சர் நாகை மாவட்டத்திற்கு வர உள்ளார்.

    அதற்கு முன்னதாக அரசாணை வெளியிட வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்ய உள்ளதால் தரமான நிலக்கடலை விதைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பாசனதாரர் விவசாய சங்க தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் கடமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.

    குறுவை சாகுபடி செய்யப்பட்டு அடுத்து சம்பா சாகுபடி செய்ய ஆயத்தமாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் நீர் பாசன பெற்றால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.

    சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு தண்ணீர் முறை வைக்காமல் நீர் விட வேண்டும்.

    கல்லணை கால்வாய் பிரிவில் மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டால் கடைமடை பகுதிக்கு நீர் வர வாய்ப்பாக இருக்கும்.

    எனவே இதுகு றித்து அதிகாரி கள், விவசா யிகள் குழு அமைத்து நேரடி ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பி டப்ப ட்டுள்ளது.

    • நெல்லை விற்பனை செய்வதற்கு அவர்கள் தவித்து வருகின்றனர்.
    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்ய வில்லை. ஆனால் இந்த ஆண்டு மழை குறை வைக்க வில்லை.

    1,200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டரில் நெல் விளைவிக்க வேளாண்மைத்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது.

    இருப்பினும் தற்போது 60 ஆயிரம் ஹெக்டரில் நெல் விளைந்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் கவலையில்தான் உள்ளனர்.விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்கு அவர்கள் தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளதால், விவசாயிகள் தங்கள் நெல்லை உரிய விலைக்கு விற்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஆனால் தருமபுரி மாவட்டத்தில் இடைத்தரகர்களை மட்டுமே நம்பி இருப்பதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.

    அரசு ஒரு கிலோ நெல்லை ரூ.19-க்கு வாங்கும் நிலையில் தனியார் வியாபாரிகள் ஒரு கிலோவுக்கு ரூ.9 முதல் ரூ.12 வரை மட்டுமே விலை பேசுகின்றனர்.

    இதனால் டெல்டா மாவட்டங்களை போல தருமபுரியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    • வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளது.
    • ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. அணையின் நீர்ப்பிடிப்பு உயரம் 34.45 அடியாகும்.அணையின் நீளம் 1,360 மீட்டராகும்.

    சித்தேரி மலை தொடரில் பெய்த கனமழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளது.

    இதனால் தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30-க்கும் அதிகமான ஏரிகள், குளம்,குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்புவதற்கு ஆதாரமாக இருப்பதுடன் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் திறந்துவிட்டால் 15-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.

    தற்போது எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, வேப்பம்பட்டி, மாம்பாடி, அச்சல்வாடி உள்ளிட்ட கிராம பகுதியிலுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளன.

    பொதுப் பணிதுறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வள்ளிமதுரை சுற்று வட்டாரப் பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 511 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் 1813 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 134.95 அடியாக குறைந்து ள்ளது.
    • 2ம் போக நெல்சாகுபடிக்கு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் 137 அடி வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 511 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் 1813 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 134.95 அடியாக குறைந்து ள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் விவசாய த்துக்கு போதுமான தண்ணீர் உள்ளது.

    இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். இதன் மூலம் 2ம் போக நெல்சாகுபடிக்கு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும், வைகை அணை யின் நீர்மட்டம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 70 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 1579 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. 30 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.11 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்க ப்படுகிறது.

    • கொடைக்கானலில் பெரும்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
    • விளைச்சல் குறைந்து வருவதால் இதனை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதிகளின் அதிக இடங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். பெரு–ம்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளம்ஸ் பழங்களை கொடைக்கானல் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்பி வாங்கி செல்வதுண்டு. இதேபோல மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்கள் ஜாம் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைச்சல் கைகொடுத்தபோதும் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காத நிலைேய உள்ளது.

    கடந்த சில வருடங்களாக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விளைச்சல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இந்த வகையான பழங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வாங்கி உண்ணும் பழங்களாக இவை இருந்து வருகிறது. எனவே பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் பழங்களின் விளைச்சலை மீட்டெடுக்க தோட்டக்க–லைத்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கிடைக்கும் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் பழங்கள் அதிக உற்பத்தி செய்யும் இடமாக கொடைக்கானல் உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் விளைச்சல் குறைந்து வருவதால் இதனை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாளவாடி அருகே பசு மாட்டை அடித்து கொன்றது
    • 2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இதில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளி யேறும் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொல்வது தொடர்கதை யாகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடியை அடுத்த சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி (48) விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இவர் மாடுகளை தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    அதன்படி வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். மதியம் மாடுகள் திடீரென கத்தின. மாடுகளின் சத்தம் கேட்டு நாகமணி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கு பசு மாடு ஒன்று கழுத்து, முதுகு போன்ற பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாட்டை புலி அடித்துக்கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வன ச்சரகர் சதீஷ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கால் தடம் புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே மாட்டை புலி அடித்து க்கொன்றது தெரிய வந்தது.

    கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 நாய், 2 கன்றுக்குட்டி ஆகியவற்றை புலி அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து உள்ளது. மேலும் கடந்த வாரம் மாடு ஒன்றையும் புலி கொன்று உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கிராமத்துக்குள் புலி புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புலி தாக்கி இறந்த மாட்டுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை விவசாயிக்கு வழங்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×