search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்

    • நெல்லை விற்பனை செய்வதற்கு அவர்கள் தவித்து வருகின்றனர்.
    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்ய வில்லை. ஆனால் இந்த ஆண்டு மழை குறை வைக்க வில்லை.

    1,200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டரில் நெல் விளைவிக்க வேளாண்மைத்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது.

    இருப்பினும் தற்போது 60 ஆயிரம் ஹெக்டரில் நெல் விளைந்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் கவலையில்தான் உள்ளனர்.விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்கு அவர்கள் தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளதால், விவசாயிகள் தங்கள் நெல்லை உரிய விலைக்கு விற்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஆனால் தருமபுரி மாவட்டத்தில் இடைத்தரகர்களை மட்டுமே நம்பி இருப்பதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.

    அரசு ஒரு கிலோ நெல்லை ரூ.19-க்கு வாங்கும் நிலையில் தனியார் வியாபாரிகள் ஒரு கிலோவுக்கு ரூ.9 முதல் ரூ.12 வரை மட்டுமே விலை பேசுகின்றனர்.

    இதனால் டெல்டா மாவட்டங்களை போல தருமபுரியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×