search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers request"

    • உடன்குடி பகுதியில் உள்ள வியாபாரிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரியுடன் கலந்து முடிவு செய்வதாக கூறினார்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலன்மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடியில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது உடன்குடி பகுதியில் உள்ள வியாபாரிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திசையன்விளையில் இருந்து தினசரி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு உடன்குடி வந்து பின்பு குலசை, திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ் உடன்குடியில் முன்பதிவு செய்வதில்லை. உடன்குடியில் வைத்து பஸ்சில் ஏறினாலும். ரூ.620 திசையன்விளையில் உள்ள டிக்கெட் தான் போடு கிறார்கள். உடன்குடிக்கு என்று முன்பதிவு செய்வ தில்லை. மேலும் உடன்குடிக்கு தனியாக கட்டணம் வசூல் செய்ய வேண்டும். இந்த பஸ் திடீரென மாற்று வழியில் செல்லும் நிலை வரும். புதுச்சேரி செல்லும் அரசு பஸ்சில் உடன்குடிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரியுடன் கலந்து முடிவு செய்வதாக கூறினார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் பாலாசிங், இளங்கோ, அஸ்ஸாப் அலி பாதுஷா, மால் ராஜேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் நெல்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். வத்தலக்குண்டு அருகே உள்ள ஆடுசாபட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து நெல்மணிகளை அறுவடை செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி தவசி செல்வம் அவருக்கு சொந்தமான வயல் ஆடுசாபட்டியில் 100 ஏக்கரில் உள்ளது. அங்கு நெல் பயிரிட்டு விவசாயம் செய்து தற்போது அறுவடை செய்து நெல் மணிகளை குவியல் குவியலாக குவித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கமே நேரடி நெல் கொள்முதல் செய்கிறது.

    இந்த நேரடி கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தையை விட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்பினார்கள். தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் விவசாயிகள் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது ஆடுசாபட்டியிலிருந்து விராலிப்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி, நிலக்கோட்டை, ராமராஜபுரத்திற்கு எடுத்து செல்வதற்கு வண்டி வாடகை ஏற்றுக் கூலி, இறக்கு கூலிக்கு அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே வத்தலகுண்டு பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு செலவுத்தொகை குறைந்து அதிக லாபம் கிடைக்கும் என்றார்.

    ஆடுசாபட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு மஞ்சள் ஆற்றில் இருந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக கொடுக்கப்பட்டு வருகிறது. சிமெண்ட் வாய்க்கால் அமைத்துக் கொடுத்தால் தண்ணீர் வீணாகாமல் முழுவதும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அமைச்சர் இ. பெரியசாமி விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறினார்.

    • திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட 4 தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக குடகனாறு அமைந்துள்ளது.
    • மழைநீரை இப்பகுதி கண்மாய்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    நிலக்கோட்டை:

    தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒன்றாக திகழ்வது கொடைக்கானல், பன்றிமலை, பண்ணைக்காடு, பெரும்பாறை, ஆடலூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் சேர்ந்து குடகனாறு உற்பத்தியாகி ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் சேர்கிறது.

    திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட 4 தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக குடகனாறு அமைந்துள்ளது.

    இந்தக் குடகனாறு ஆற்றின் தென்பகுதி கன்னிமார் கோவில் அருகே தொடங்கும் ராஜவாய்க்கால் மூலமாக கிடைக்கும் மழைநீர், மழை காலங்களில் நரசிங்கபுரம் குளம், போடிகாமன் வாடி கண்மாய், செங்கட்டாம்பட்டி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் ஆண்டுதோறும் நிரம்பி வருகிறது.

    செங்கட்டாம்பட்டி கண்மாயை அடுத்துள்ள சீத்தாப்புரம் பாப்பன்குளம், குளத்துப்பட்டி பெரியகுளம், நிலக்கோட்டை கொங்கர் குளம், கண்மாய்களுக்கு இந்த ஆற்றின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற தண்ணீரின் மூலம் கண்மாய்கள் நிரம்பியது. ஆனால் சிலுக்குவார் பட்டி ஊராட்சியில் உள்ள மன்னவராதி கண்மாய்,

    பாப்பன்குளம், பொன்னன் குளம் உள்ளிட்ட கண்மாய்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கிறது. இந்தப் பகுதி கண்மாய்களை நிரப்ப கோரி கிராம மக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனித சங்கிலி போராட்டம், சாலைமறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.

    அதோடு மட்டுமல்லாமல் இக்கிராம ஊராட்சியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் சுவை மாறி உப்புத் தண்ணீராக மாறி விட்டது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது. எனவே இப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்போது பெய்து வரும் மழை நீரை எந்த வகையிலும் வீணாகாமல் வாய்க்கால் வழியே ராஜ வாய்க்கால் மூலமாக கிடைக்கப்பெறும் மழைநீரை இப்பகுதி கண்மாய்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    இதுகுறித்து சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாவது:-

    சிலுக்குவார்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கண்மாய்கள் மன்னவராதி, பாப்பன்குளம், பொன்னன் குளம் மற்றும் சிறுசிறு குட்டைகள் உட்பட அதிக குளங்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மழை இல்லாததாலும், தொடர்ந்து ராஜ வாய்க்கால் தண்ணீர் கிடைக்கப் பெறாததால் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது.

    இதனால் விவசாயம் செய்வதற்கான வழி இல்லாமல் இங்கிருந்து கிராம மக்கள் ஏராளமானோர் பஞ்சம் பிழைக்க வெளியூர்களுக்கு சென்று விட்டனர். எனவே இக்கிராமம் செழிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது பெய்து வரும் மழை நீரை முழுமையாக வீணாகாமல் மேல் உள்ள கண்மாய்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    ராஜ வாய்க்கால் என்பது பல தலைமுறையாக எங்கள் கிராம பகுதிகளுக்கும் நிலக்கோட்டை பகுதியில் ஒன்றிய பகுதியில் பல இடங்களில் கண்மாய் நிரப்புவதற்கு மிகுந்த உதவியாக அமைந்துள்ளது. எனவே ராஜா வாய்க்காலில் இருந்து நிலக்கோட்டை வரை சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.

    • சோத்துப்பாறை அணையில் இருந்து இந்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
    • தண்ணீர் திறப்பதற்கு முன்பாக வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம்:

    சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், வாய்க்கால்களில் உள்ள உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து இந்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில் புதிய ஆயக்கட்டு பகுதியான கைலாசபட்டி, கோவில்காடு, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள 1,040 ஏக்கர் நேரடி பாசனம் பெறும். மேலும் நிலத்தடி நீர் உயர்வால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பெறும்.

    இந்நிலையில் பாசனத்திற்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்காலில் பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தண்ணீர் திறந்து விடப்பட்டால் முழுமையாக பாசனத்திற்கு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே பாசனத்திற்கு நீர் திறக்க 10 முதல் 15 நாட்களே உள்ள நிலையில் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் கடைமடை வரை பாசன நீர் செல்லும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பு குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை என புதிய ஆயக்கட்டு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே தண்ணீர் திறப்பதற்கு முன்பாக வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து, பாசன நீர் தங்கு தடையின்றி செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 511 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் 1813 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 134.95 அடியாக குறைந்து ள்ளது.
    • 2ம் போக நெல்சாகுபடிக்கு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கூடலூர்:

    கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர் மட்டம் 137 அடி வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 511 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் 1813 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 134.95 அடியாக குறைந்து ள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் விவசாய த்துக்கு போதுமான தண்ணீர் உள்ளது.

    இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். இதன் மூலம் 2ம் போக நெல்சாகுபடிக்கு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட போதும், வைகை அணை யின் நீர்மட்டம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 70 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு 1579 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. 30 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.11 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்க ப்படுகிறது.

    • வைகை அணை மூலம் 33 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்மூலம் 58 கிராமகால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது.
    • 2000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த அக்டோபர் 21-ந்தேதி முதல் 70 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக 69 அடி நீர்மட்டம் உயரும்போது அணையின் பாதுகாப்பு கருதி வைகையாற்றில் உபரிநீர் திறக்கப்படும்.

    வைகை அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்மூலம் 58 கிராமகால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது.

    கடந்த 1999-ம் ஆண்டு ரூ.33.81 கோடி மதிப்பில் தொடங்கிய இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.86.53 கோடி செலவில் முடிவடைந்தது. இதனைதொடர்ந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் இருந்து 27 கி.மீ தூரம் பிரதான கால்வாய் வழியாக உசிலம்பட்டி அருகே உத்தமப்பநாயக்கனூர் வரையும், அங்கிருந்து 2-ஆக பிரிந்து 11.9 கி.மீ தூரம் இடபுறமும், 10.2 கி.மீ தூரம் வலதுபுறமும், 58 கிராம கால்வாய் செல்கிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும்போது கால்வாய்க்கு தண்ணீர் திறக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. கடந்த 21 நாட்களாக அணையின் நீர்மட்டம் 70 அடிவரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உசிலம்பட்டி பகுதியில் உள்ள 2000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.54 அடியாக உள்ளது. 2031 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2069 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. முல்ைலபெரியாறு அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 1988 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 184 கனஅடிநீர் உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 5, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி, திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருக்கிறது.
    • வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தற்போது ஆறு முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    நிலக்கோட்டை:

    தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றுப்படுகைகளில் தண்ணீர் கரைபுரண்டு சென்று கொண்டிருக்கிறது. மேலும் தேனி, திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருக்கிறது.

    இதன் காரணமாக வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தற்போது ஆறு முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு செல்லும் தண்ணீரை உபரி நீராக கருதப்படுகிறது. இந்த வகையில் செல்லும் உபரிநீரை கொண்டு நிலக்கோட்டை பகுதியிலுள்ள கண்மாய்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வைகை ஆற்றில் செல்லும் உபரி நீரைக்கொண்டு கண்மாய்களை நிரப்பினால் நிலக்கோட்டை பகுதிகளில் வறட்சியை போக்கவும், குடிநீர் தட்டுப்பாடின்றி நிலத்தடி நீர்மட்டம் உயர்வும் வழிவகை ஏற்படும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே விவசாயிகள் நீண்டநாள் கனவான இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். எனவே இது சம்பந்தமான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    பெரம்பலூர் அருகே இலவச மின்சாரம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    ×