search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்றவர்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.

    • பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர்.
    • சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி நுழைவு பாலம் அருகே பள்ளிபாளையம் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நுழைவுபாலம் அருகே 2 பேர் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்தனர். சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 26) என்பதும் அதேபகுதியை சேர்ந்த மற்றொருவர் நீலகண்டன் (30) ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியைசேர்ந்த அழகேசன் (வயது 65). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற தாரமங்கலம் போலீசார் அழகேசனை பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.

    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பழனிச்சாமியை பவானி போலீஸார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பவானி செங்கோடன் டீக்கடை வீதி பகுதிக்கு சென்று உள்ளனர்.

    அப்போது அந்த இடத்தில் கந்தசாமி மகன் பழனிச்சாமி (52) தமிழக அரசு அனுமதியின்றி பல்வேறு வகையான மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து பழனிச்சாமி யை பவானி போலீஸார் கைது செய்தனர்.

    விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
    • கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் ஈரோடு தென்றல் நகரில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா என 12 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.

    இவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரம் ஆகும். இதை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோமன் ஸ்டாச்ரக்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • மேட்டுப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.
    • இதையறிந்த போலீசார் லாட்டரி விற்றவரை கைது செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது46). இவர், தினந்தோறும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஒரு மளிகை கடை முன் நின்று கொண்டு, தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார், சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

    தாரமங்கலம் அருகே மதுவை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது70), கோணகப்பாடியை சேர்ந்த சரவணன் (47) ஆகியோர் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக 60 மது பாட்டில்களையும், ரூ.7600-யும், பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்து.

    இதையடுத்து தாரமங்கலம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த பறிமுதல் செய்து 2 ே பரையும் கைது செய்தனர்.

    • சத்தியமங்கலம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டி அண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்குபேட்டை அடுத்த கோட்டுவீராபாளையம் பகுதில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாசிவம் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

    அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×