search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள்கள்"

    • ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
    • சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .

    சேலம்:

    ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.

    இதனால் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார், ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் ஏற்காடு பூங்கா அருகே நேற்று வாகன சோதனை நடத்தி னர். அப்போது வந்த ஒரு கும்பலை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கூறு

    கையில் தாங்கள் மதுரை, சென்னையில் இருந்து வந்த தாகவும், சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .

    அதுபோல் ரோஜா தோட்டத்தில் நடத்திய சோத னையில் ஒண்டிக்கடையில் உள்ள கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த 3 மோட்டார்சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகரத்தில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி அதன் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பூரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தீவிர சோதனை மேற்கொண்டதில் திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் நிலைய சரகத்தில் 68 மோட்டார் சைக்கிள்களும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய சரகத்தில் 30 மோட்டார்சைக்கிள்களும், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 60 மோட்டார்சைக்கிள்களும், தெற்கு காவல் நிலைய சரகத்தில் 294 மோட்டார்சைக்கிள்களும், மத்திய போலீஸ் நிலைய சரகத்தில் 12 மோட்டார் சைக்கிள்களும், நல்லூர் போலீஸ் நிலைய சரகத்தில் 37 மோட்டார்சைக்கிள்களும் வீரபாண்டி போலீஸ் நிலைய சரகத்தில் 57 மோட்டார்சைக்கிள்களும் என மொத்தம் 564 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் மனைவி கண் முன் தொழிலாளி பலி்யானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பெரியகரசப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அருண் ( வயது 27) கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் அருண்குமாரும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் வந்துள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் பொய்யேரி அருகே ஒழுகூர்பட்டி பிரிவு சாலையில் திரும்ப‌ முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் அருணின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் அருண் தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதனை கண்டு அவரது மனைவி கதறி அழுதார். சிறிது நேரத்திலேயே அருண் பரிதாபமாக இறந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அருண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த‌ அவரது மனைவி ஐஸ்வர்யா அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தேவராஜ் (27) காயம் அடைந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×