வாடகைக்கு விட்ட 9 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .
வாடகைக்கு விட்ட 9 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
Published on

சேலம்:

ஏற்காட்டில் சட்டத்துக்கு புறம்பாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாக வாடகை ஆட்டோ, கார் டிரைவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் கூறினர்.

இதனால் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார், ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் ஏற்காடு பூங்கா அருகே நேற்று வாகன சோதனை நடத்தி னர். அப்போது வந்த ஒரு கும்பலை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கூறு

கையில் தாங்கள் மதுரை, சென்னையில் இருந்து வந்த தாகவும், சேலம் ஜங்ஷனில் உள்ள மோட்டார்சைக்கிள் கடையிலிருந்து 6 வாக னங்களை தினசரி 500 ரூபாய் வாடகைக்கு எடுத்து ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் அந்த 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .

அதுபோல் ரோஜா தோட்டத்தில் நடத்திய சோத னையில் ஒண்டிக்கடையில் உள்ள கடையில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த 3 மோட்டார்சைக்கிள்களை யும் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஏற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com