search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம பெண்"

    • பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் (வயது 53). இவர் லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக புதிய நம்பரில் இருந்து 'ஹலோ ஜி' என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரோ மெசேஜ் அனுப்பி இருப்பதாக கருதி இதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்தபோது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார்.

    அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட் டார். பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை 'யூ-டியூப்'பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுவை பா.ஜனதா தலைவரிடம் இளம் பெ ண் ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள். இதுபோல் யாரும் பாதிக் கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் எண் 1930-ல் புகார் அளியுங்கள்' எனத்தெரிவித்தனர்.

    • குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.
    • பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் நெடுஞ்சாலையி்ல் உள்ள வெங்கடாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.

    இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி காமாட்சி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காமாட்சியை பிரசவத்திற்காக மூர்த்தி 4 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

    காமாட்சியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் காமாட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மூர்த்தியும் அவரது 3 வயது மகன் சக்திவேலும் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில் காமாட்சிக்கு உதவி செய்வதற்காக மூர்த்தியின் சகோதரர் அண்ணாமலையின் மனைவி குலாம்மாள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் அவரது 6 வயது மகள் சவுந்தர்யாவும் உடன் வந்தாள்.

    மூர்த்தியும், குலாம்மாளும் காமாட்சியை கவனித்து கொள்ள மருத்துவமனைக்குள் சென்ற நிலையில் சக்திவேலும், சவுந்தர்யாவும் மருத்துவமனை வளாகத்தில் விளையாடி பொழுதை போக்கினார்கள். இரவில் அவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வராண்டாவில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மர்ம பெண் சக்திவேலுடனும், சவுந்தர்யாவுடனும் நெருங்கி பழகினார். அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையின் பல்வேறு இடங்களையும் சுற்றி காண்பித்தார். மூர்த்தியும், குலாம்மாளும் பேறு கால பிரிவில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் இருவரையும் அந்த பெண் கவனித்து கொள்வதை நினைத்து நம்பி மேற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம பெண் சக்திவேல், சவுந்தர்யா இருவரையும் தனது அருகில் படுக்க வைத்துக் கொண்டார். இரண்டு நாட்கள் தங்களுடன் இருந்ததால் மூர்த்தியும் அந்த பெண்ணை நம்பிவிட்டார். நேற்று காலை அந்த மர்ம பெண்ணும், இரண்டு குழந்தைகளும் மாயமாகி இருந்தனர்.

    இதையறிந்து மூர்த்தியும், குலாம்மாளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை வளாகம் முழுக்க தேடி பார்த்தனர். மர்ம பெண் பற்றி மருத்துவமனையில் விசாரித்தபோது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

    உணவு வாங்கி கொடுத்து பாசமாக கவனித்து கொண்ட அந்த மர்ம பெண் இரு குழந்தைகளையும் கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் மூர்த்தி இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மர்ம பெண் பற்றி அறிய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    அப்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. சில சி.சி.டி.வி. கேமராக்கள் மட்டுமே இயங்கின. அதில் உள்ள காட்சிகளை பார்க்க முயற்சி செய்த போது மின்சார தடை காரணமாக பதிவுகள் அனைத்தும் அழிந்து போயிருப்பது தெரிய வந்தது.

    கண்காணிப்பு கேமரா காட்சி உதவிகள் கிடைக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சுற்றி வந்த மர்ம பெண் பற்றிய தகவல்கள் போலீசாருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அந்த பெண் திட்டமிட்டு குழந்தைகளுடன் பழகி கடத்தி சென்றிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

    சில இடங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்து உள்ளன. ஆனால் செவ்வாய்க்கி ழமை இரவு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பலத்த மழை பெய்ததால் காட்சிகள் தெளிவாக தெரியவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளை கடத்திய மர்ம பெண் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த பெண் 2 குழந்தைகளையும் எங்கே கடத்தி சென்றிருப்பார் என்பதும் தெரியவில்லை. அந்த பெண்ணை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • பெண் அங்கு வந்து கடையில் பொருட்கள் வாங்குவது போல் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
    • சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே ஆர்.சி.தெரு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் கடந்த 5 வருடங்களாக களியக்காவிளை சந்திப்பு பகுதியில் வெற்றிலை,பாக்கு கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று காலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து கடையில் பொருட்கள் வாங்குவது போல் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

    பிறகு நிர்மலா கடைக்கு தேவையான தண்ணீர் எடுப்பதற்கு பக்கத்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது அந்த மர்மபெண் அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நிர்மலா கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பேக்கை காணவில்லை. அதில் ரூ.85 ஆயிரம் மற்றும் ஆதார் கார்டை வைத்திருந்தார். இதனை மர்ம பெண் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் நிர்மலா இதுகுறித்து களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×