search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரநாய்"

    • அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.
    • மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, கடமான், மரநாய், குரங்குகள் என அரியவகை விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் தென்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் குன்னூர் தீயணைப்பு அலுவலக பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மரநாய் தென்பட்டது. இதனை உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் மரநாய் வனபகுதிக்குள் சென்று மறைந்தது

    • சிவகாசி அருகே இரை தேடி ஊருக்குள் வந்த அரிய வகை மரநாய் இறந்தது.
    • காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வைப்பாற்று கரையில் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான்கள், காட்டு பன்றிகள், மிளா, வரையாடு, செந்நாய், உள்பட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இவை உணவுக்காக அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் பகுதியில் நேற்று நாய்கள் விரட்டியதில் தப்பிய விலங்கை அந்த பகுதி வாலிபர்கள் மீட்டனர். பெயர் தெரியாத அரிய விலங்கு பிடிபட்டதாக வெம்பக்கோட்டை கால்நடைத்துறைக்கும், வனத்துறையினருக்கும் சமூக ஆர்வலர் கண்ணன் தகவல் தெரிவித்தார்.

    காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது. பின்னர் வந்த வனச்சரக அலுவலர் பழனிக்குமார், கால்நடை மருத்துவர் திலகவதி ஆகியோர் அந்த விலங்கை பரிசோதித்த போது அழிந்து வரும் இனத்தை சேர்ந்த மரநாய் என்பது தெரியவந்தது.

    மேலும் இந்த வகை விலங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இறந்த மரநாய்க்கு 3 வயது என்பதும், பெண் இனத்தை சேர்ந்ததும் தெரிந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மரநாய் அருகிலேயே புதைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால் அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார்.

    • வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர்.
    • அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பை சேர்ந்தவர் செல்வேந்திரன் கயிறு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த செல்வேந்திரன் அங்கு பூனையை போன்ற விலங்கு ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தார். அது மரநாய் என தெரிய வந்ததும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர். பிடிபட்ட மரநாய் சுமார் 2 கிலோ எடை கொண்டதாக இருந்தது என்று வன ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்தில் அரிய வகை விலங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே விஜயகுமார் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினருக்கு அது மரநாய் என்பது தெரிய வந்தது. இது அடுத்து மரநாயை வலை கட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள். வலையில் சிக்காமல் அங்கிருந்து ஓடியது. இதனால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது. இதையடுத்து வனக் குழுவினர் அந்த மரநாயை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வலை கொட்டலாம் காப்பு காட்டு பகுதியில் விட்டனர். 

    ×