search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது போதையில்"

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் மது போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்துக்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பொதுமக்களும் போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் வேகமாக, மது போதையில் செல்வது குறித்து தெரிவித்து வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் பஸ் நிலையம், அண்ணா மடுவு, ஜிஹெச் கார்னர், தவிட்டுப் பாளையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடத்தில் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    • சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயணவலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு திருமணமாகி கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து மாரியம்மாள் (25) என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுக்கு நோய் பாதிப்பு உள்ளது. மேலும் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மாரியம்மாள் சுரேசை விட்டு பிரிந்து மகனுடன் நாமக்கல் மாவட்டம், ஆனங்கூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று தனது வீட்டின் படிக்கட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    அதைப்பார்த்த அவரது தங்கை ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் சுரேசை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாய்க்கால் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த ராபர்ட் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார்.
    • டாக்டர் ராபர்ட்டை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் பாரதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (55). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவரது மகன் ரிச்சர்ட் (24), மனைவி, குழந்தை–களுடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங் ேகாட்டில் வசித்து கொண்டு அங்குள்ள தார்பாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் ராபர்ட் வீட்டுக்கு செல்லாமல், மூலப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகில் சாலையோ ரத்திலேயே தங்கிக்கொண்டு அவ்வப்போது எலெட்ரீஷியன் வேலை செய்து கொண்டு அதில் வரும் வருமானத்தில் மது அருந்திவிட்டு சுற்றி திரிந்து வந்தார்.

    அவ்வப்போது திருச்செங்கோட்டில் உள்ள தனது மகன் ரிச்சர்டையும் சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மூலப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள வாய்க்கால் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த ராபர்ட் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார்.

    சிறிது நேரம் கழித்தே அவ்வழியாகச் சென்றவர்கள் வாய்க்காலில் விழுந்து கிடந்த ராபர்ட்டை கவனித்துள்ளனர்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ராபர்ட்டை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராபர்ட்டின் மகன் ரிச்சர்ட் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    ×