search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தீவிர விசாரணை"

    • கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கந்தசாமிபாளையம் நெடுங்காட்டு தோட்டம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (85). இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்கள் அந்த பகு தியில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் சுப்பிரமணியும், கண்ணம்மாளும் இருந்தனர். அப்போது முக மூடி அணிந்த ஆசாமிகள் 3 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளே புகுந்தனர்.

    இதையடுத்து அவர்களி டம் முகமூடி ஆசாமிகள் நகை, பணத்தை தருமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முகமூடி ஆசாமிகள் கணவன், மனைவி கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் செய்வது அறியாமல் கண்ணம்மாள் தனது கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தாலிசங்கிலியை கழற்றி கொடுத்தார்.

    பின்னர் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.55 ஆயிரத்தையும் எடுத்து கொடுத்தார். இதையடுத்து கொள்ளையார்கள் நகை- பணத்தையடுத்து மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து கணவன், மனைவி 2 பேரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்க ளுடைய மகன் ஆனந்தன் ஆகியோர் அங்கு சென்று கதவை திறந்து பெற் றோரை மீட்டார்.

    இது குறித்து ஆனந்தன் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் சாமிநாதபுரம் பஸ் நிறுத் தத்தில் சந்தேகத்துக்கிடமான 3 மர்ம நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சுப் பிரமணியின் தோட்டத்து வீட்டை நோக்கி சென்றதும், அதே நபர்கள் இரவு 9 மணி அளவில் அதே பஸ் நிறுத்தம் 2 சென்று பஸ்சில் ஏறி சென்ற தும் தெரியவந்தது.

    எனவே அவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க லாம் என்று கூறப்படுகிறது. தகவல் கிடைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாவையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா க்களையும் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மை யான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகளுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது, மரங்கள் வெட்டி சாய்ப்பது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

    இதனிடையே இளம்பெண் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பேரில் வழக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி(42)என்பவருக்கு சொந்தமான டிராக்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகள், வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் மீண்டும் இந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம் பகுதிகளை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிம்கார்டு விற்கும் முகவர் இளம்பரிதி (33) என்பவர் போலியாக ஆவணம் தயாரித்து சிம் கார்டுகளை விற்பனை செய்வ தாக ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது. இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமை யிலான போலீசார் இளம்பரிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆதாயம் அடையும் வகையில், ஒரு சிலரின் புகைப்படத்தை பல்வேறு நபர்களின் அடை யாள ஆவணங்களுக்கு பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவ னங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி அந்த நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    இந்த நிலையில் கைதான இளம்பரிதியிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட சிம்கார்டுகளை வாங்கியவர்கள் யார்? யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் இவர் எத்தனை பேருக்கு போலி ஆவணம் மூலம் சிம்கார்டு கொடுத்து உள்ளார். அந்த சிம்கார்டு பெற்றவர்கள் குற்ற பின்னணி யில் உள்ளவர்களா? என்றும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் கூறியதாவது:

    சிம் கார்டுகளை விற்ப னை செய்யு ம் முக வர்கள் இதுபோன்று போலியான ஆவ ணங்களை வைத்து சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்பனை செய்தால் சம்பந்தப்ப ட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும்.

    சிம் கார்டு வாங்கும்போது பொதுமக்கள் தங்களது பெயரில் உள்ள சிம்கார்டு மட்டும்தான் ஆக்டிவேட் செய்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிராம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரி வித்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது.

    அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அல்லது தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விபரங்களையும் அப்டேட் செய்ய வேண்டாம். வங்கிகளில் இருந்து தொலை பேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் எந்த தகவலையும் கேட்க மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்பு டன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அபிநாத் (வயது 3). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை.
    • காணாமல் போன சிறுவன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் மிதந்தார்.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே யுள்ள நாச்சியா ர்பேட்டை யைச் சேர்ந்தவர் அருட்செ ல்வன். இவரது மகன் அபிநாத் (வயது 3). வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தவரை கடந்த 23-ந் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள், அபிநா த்துடன் விளையாடிய மற்ற சிறுவர்களிடம் விசாரித்தும் அபிநாத் கிடைக்கவில்லை. இதை யடுத்து அருட்செ ல்வனின் புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் சிறுவனின் வீட்டருகே நேற்று மாலை முதல் துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த போது காணாமல் போன சிறுவன் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் இறந்த நிலையில் மிதந்தார். இத்தகவல் ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தெரிவி க்கப்பட்டது. தகவலின் பேரில் தீய ணைப்பு துறையினருடன் வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்    வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது சிறுவன் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்தவுடன் இறந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டதால் இந்த சிறுவன் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரோனும் சிறுவனை கொலை செய்து விட்டனரா? என்பது குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த தங்க தாலி கொடியை திடீரென பறித்து கொண்டு ஓடினார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு கோட்டை முனி யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவரது மனைவி அமுதா தேவி (38). இவர் தனது உறவினர் ஜெயலட்சுமியு டன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்றார்.

    தொடர்ந்து அமுதாதேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் பின்பகுதியில் உள்ள வள்ளி, தெய்வானை சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த தங்க தாலி கொடியை திடீரென பறித்து கொண்டு ஓடினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவதற்குள் அவர் காட்டுப்பகுதிக்குள் புகுந்து சென்று தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அமுதாதேவி அவரது கணவர் ஜெகநாதனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இைதயடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து மனைவியிடம் விசாரி த்தார்.

    மேலும் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. திருட்டுப் போன தங்க தாலிக்கொடியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீ சார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காயாம்பட்டி மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி நந்தினி (வயது 22).

    இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாண்டி, அவரது தாயார் ராணி, உறவினர்கள் பாண்டிச் செல்வி, பாண்டிசெல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு நந்தினியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நந்தினி தனது தந்தை அமராவதியிடம் செல்போனில் அடிக்கடி தகவல் தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தன்று நந்தினி வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக உறவினர்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் அமராவதி அங்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் கருகிய நிலையில் நந்தினி பிணமாக கிடந்தார்.

    வேறு யாரும் இல்லாததால் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அமராவதி மதுரை ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீயில் கருகி பிணமான நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வரதட்சணை கொடுமையில் நந்தினி எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆனால் நந்தினியின் கணவர் பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதால் நந்தினி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×