search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The police are"

    • மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த தங்க தாலி கொடியை திடீரென பறித்து கொண்டு ஓடினார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு கோட்டை முனி யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவரது மனைவி அமுதா தேவி (38). இவர் தனது உறவினர் ஜெயலட்சுமியு டன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்றார்.

    தொடர்ந்து அமுதாதேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் பின்பகுதியில் உள்ள வள்ளி, தெய்வானை சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அமுதா தேவியின் கழுத்தில் இருந்த தங்க தாலி கொடியை திடீரென பறித்து கொண்டு ஓடினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வருவதற்குள் அவர் காட்டுப்பகுதிக்குள் புகுந்து சென்று தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து அமுதாதேவி அவரது கணவர் ஜெகநாதனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இைதயடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து மனைவியிடம் விசாரி த்தார்.

    மேலும் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. திருட்டுப் போன தங்க தாலிக்கொடியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீ சார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×