search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் விழிப்புணர்வு"

    • ஊட்டமலை அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    • பயணிகளுக்கு போதைப்பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துறைக்கப்பட்டது.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் போதைப் பொருட்கள் உலா வருவதை தடுக்கும் விதமாக போதைப் பொருள் இல்லாத தமிழகம் என்ற பிரச்சாரத்துடன் ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் போலீசார் சார்பில் ஆயில் மசாஜ் செய்பவர்களிடமும், பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் போதைப்பொருள் இல்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் மசாஜ் செய்பவர்களும், பரிசல் இயக்குபவர்களும், வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதைப்பொருள் குறித்த தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துறைக்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராயபுரம்:

    காசிமேட்டில், வண்ணாரப்பேட்டை போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காசிமேடு கடலில் படகு போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

    இதனை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் இளைய அருணா, போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    கிரிக்கெட் மற்றும் படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் சிவா, இயக்குனர் விக்னேஷ்ராஜா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி, இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி, ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.
    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் செங்குன்றம் துணை கமிஷனர் என். மணிவண்ணன் கலந்து கொண்டு போதையில்லா சமுதாயம் அமைந்திட அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்திட கிராம தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும். அவர்களது ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, ஜி. கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பி. வின்சன்ட் ராஜரத்தினம், எம்.ரகுநாதன் எஸ்.டி. சங்கர்,எம்.கோபால், சங்க இணை செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர்மீதும் அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று எஸ்.கைகாட்டி மற்றும் ஓம்நகர் பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும் போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

    • போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கடைசியாக சொந்த கிராமத்தில் படித்த பள்ளியில் விழிப்புணர்வு பிரசார பயணத்தினை முடித்தனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மதன், தீபக், சதீஷ், சஞ்சய், கோகுல கண்ணன், அர்ஷித் ஆகிய 6 பேர் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இவர்கள் கடைசியாக சொந்த கிராமத்தில் படித்த பள்ளியில் விழிப்புணர்வு பிரசார பயணத்தினை முடித்தனர். அவர்களுக்கு அப்பகுதி கிராம மக்கள் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர். இதில் நேதாஜி நகர் சிவக்குமார், வார்டு உறுப்பினர் ராஜன் தனியார் பள்ளி தாளாளர் டி, சிமியோன்விக்டர் கலந்து கொண்டனர்.

    ×