search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள் விற்பனை"

    • மாரியம்மன் கோவில் பின், பெரிய கானூர் செல்லும் வழிகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
    • வாகன டிரைவர்கள் சிலர், போதை வஸ்துக்களை உட்கொண்டு வாகனத்தை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது.

    அவிநாசி:

    கருவலுார் ஊராட்சி கிராமங்களில் போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் உள்ளதாக சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பொதுவெளிகளில் அதிகமாக கஞ்சா, குட்கா, ஹான்ஸ் ஆகியவை அதிகளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் கருவலூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அசம்பாவிதங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மாரியம்மன் கோவில் பின், பெரிய கானூர் செல்லும் வழிகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதுகாப்பின்றியும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வாகன டிரைவர்கள் சிலர், போதை வஸ்துக்களை உட்கொண்டு வாகனத்தை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் உரிய கவனம் காட்டுவதில்லை. எனவே போதை பொருள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

    • விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது.
    • 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்க ளான கஞ்சா, அபின், பிரவுன்சுகர், குட்கா, கூள்லிப், ஹன்ஸ் போன்றவைகள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டுதனமாக விற்பனை செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலைய எல்லைகளில் 200 பேர் போதை பொருட்களை விற்பனை செய்துவருவதாக கண்டறி யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 200 பேரின் வீடுகள் மற்றும் அவர்களின் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.8250 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன், தனிப்பிரிவு போலீசார் ராஜ்குமார் மற்றும் போலீசார் கேளூர் சந்தை மேடு பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்குள்ள கடையில் இருந்து குட்கா போன்ற போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.8250 ஆகும். இது சம்பந்தமாக வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை
    • சிகரெட்கள் பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் சரக டிஐஜி பொறுப்பு சத்யபிரியா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என அதிரடி சோதனை நடைபெற்றது.

    குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீசார் குடியாத்தம் பலமநேர் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி, காந்தி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்த சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மாமல்லபுரத்தை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக இருந்தாலும், இங்கு பல வகை போதை வஸ்துக்கள் ரகசியமாக விற்கப்படும் பகுதியாக உள்ளது என சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
    • உளவுத்துறை போலீசார் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தனியார் கல்லூரியில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்தியபிரியா தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், கல்லூரி முதல்வர், பேராசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு அறிவுரைகளை கூறிய டி.ஐ.ஜி, மாமல்லபுரத்தை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாக இருந்தாலும், இங்கு பல வகை போதை வஸ்துக்கள் ரகசியமாக விற்கப்படும் பகுதியாக உள்ளது என சிலர் புகார் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை போலீசார் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் இங்கு அடிக்கடி சர்வதேச விழாக்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    ×