போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாரியம்மன் கோவில் பின், பெரிய கானூர் செல்லும் வழிகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.வாகன டிரைவர்கள் சிலர், போதை வஸ்துக்களை உட்கொண்டு வாகனத்தை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி:

கருவலுார் ஊராட்சி கிராமங்களில் போதை பொருட்கள் விற்பனை அதிகளவில் உள்ளதாக சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பொதுவெளிகளில் அதிகமாக கஞ்சா, குட்கா, ஹான்ஸ் ஆகியவை அதிகளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.இதனால் கருவலூரில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அசம்பாவிதங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மாரியம்மன் கோவில் பின், பெரிய கானூர் செல்லும் வழிகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலேயே சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதுகாப்பின்றியும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வாகன டிரைவர்கள் சிலர், போதை வஸ்துக்களை உட்கொண்டு வாகனத்தை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் உரிய கவனம் காட்டுவதில்லை. எனவே போதை பொருள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com