search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோட்டா மாஸ்டர்"

    • மணிகண்டன் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சந்தவாசல்வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 36) இவர் கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் பகுதியில் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தனது உறவினரின் காரி யத்திற்கு திருவண்ணாமலை செல்வ தற்காக ரிஷிவந்தியத்தில் இருந்து தனியார் பஸ் ஏறி தியாகதுருகம் சென்றார். தியாகதுருகம் பஸ் நிலையத்தில் அனைத்து பயணிகளும் இறங்கி சென்றனர். மணிகண்டன் மட்டும் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது சக பயணிகள் அவரை இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவரது உறவினர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டதாகவும், எனவே மாரடைப்பால் இறந்திரு க்கலாம் என கூறினர். இதனைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பஸ்சில் வந்த பயணி இறந்து போன சம்பவம் தியாகதுருகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இப்ராகிம் ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
    • ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முகமது இப்ராகிம்(வயது 23). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.

    சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு கழுகுமலை சாலையில் நின்று நண்பருடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் தகராறு செய்து அவரை அடித்து கீழே தள்ளி தள்ளியதில் அவர் பலத்த காய மடைந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த முகமது இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் மீனாட்சி புரம் வீதி வண்டி காளியம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவிலுக்கு திருவிழாவை காண அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்ட அங்கு இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் வேட்டைக்காரன் புதூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    பொதுமக்கள் தாக்கிய தில் பன்னீர் செல்வம் காயடைந்ததால் அவை போலீசார் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகி றார்கள்.

    • புரோட்டா மாஸ்டர் ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் மீட்டு குளிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பூக்கடை கார்னர் நெரிசலான பகுதியாகும். இன்று காலை 8.30 மணி அளவில் பள்ளி, அலுவலகம், கல்லூரி மாணவர்கள் செல்லும் கூட்ட நெரிசல் பகுதியில் போதையில் தள்ளாடிய படி வந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குளிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.

    ×