கோவையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர்

குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார். பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவையில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் மீனாட்சி புரம் வீதி வண்டி காளியம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவிலுக்கு திருவிழாவை காண அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தம் போட்டனர்.

இதனை கேட்ட அங்கு இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் வேட்டைக்காரன் புதூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

பொதுமக்கள் தாக்கிய தில் பன்னீர் செல்வம் காயடைந்ததால் அவை போலீசார் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகி றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com