தியாகதுருகம் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சில் வந்த புரோட்டா மாஸ்டர் மாரடைப்பால் சாவு

மணிகண்டன் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தியாகதுருகம் பஸ் நிலையத்தில்  தனியார் பஸ்சில் வந்த புரோட்டா மாஸ்டர் மாரடைப்பால் சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சந்தவாசல்வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 36) இவர் கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் பகுதியில் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தனது உறவினரின் காரி யத்திற்கு திருவண்ணாமலை செல்வ தற்காக ரிஷிவந்தியத்தில் இருந்து தனியார் பஸ் ஏறி தியாகதுருகம் சென்றார். தியாகதுருகம் பஸ் நிலையத்தில் அனைத்து பயணிகளும் இறங்கி சென்றனர். மணிகண்டன் மட்டும் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது சக பயணிகள் அவரை இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவரது உறவினர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டதாகவும், எனவே மாரடைப்பால் இறந்திரு க்கலாம் என கூறினர். இதனைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பஸ்சில் வந்த பயணி இறந்து போன சம்பவம் தியாகதுருகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com