search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய அணை"

    • கேரள நீர் வளத்துறை அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.
    • இந்த கருத்து தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கூடலூர்:

    கேரள நீர் வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் தனது முகநூல் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. அணையின் நீர் மட்டம் 136 அடி என்பதே கேரளாவின் அடுத்த நிலைப்பாடும் கூட. இதில் எந்த மாற்றமும் இல்லை.

    142 அடி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ள்ளது. ஆனால் கேரளாவுக்கு பாதுகாப்பும் தமிழகத்துக்கு தண்ணீரும் என்பதே கேரளாவின் பிரதான இலக்கு. கண்காணிப்பு குழுவில் தொழில் நுட்ப உறுப்பினர் இடம் பெற்றிருப்பது கேரளாவின் வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு சான்றாகும்.

    தற்போதுள்ள பெரியாறு அணைக்கு 1300 அடிக்கு கீழே புதிய அணை கட்ட இடம் கண்டறியப்பட்டு இதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    கேரள மந்திரியின் இந்த பதிவுக்கு தமிழக விவசாயி கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், கேரள மந்திரியின் இந்த கருத்து தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி வரு கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதில் முழு மூச்சாக செயல்படும் கேரள தற்போது இதற்காக தனது அமைச்சர்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கி றது. ரோஸி அகஸ்டின் ஏற்கனவே பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என ஊர்வலம் நடத்தியவர். அவரது கட்சியைச் சேர்ந்த மானி என்பவர் தற்போது செல்லாக்காசாகிவிட்ட நிலையில் எதையாவது பேசி தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

    முன்னாள் அமைச்சர் எம்.எம்.மணி புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. ரமாவுக்கு எதிராக கூறிய கருத்துக்கள் கேரளா வையே அசைத்து பார்த்து கொண்டிருக்கும் நிலையில் பிரச்சினையை திசை திருப்புவதற்காக இது போன்ற வாதத்தை கேரள மந்திரி முன் வைத்திரு க்கிறார்.

    இடுக்கி சட்டமன்ற தொகுதியில் 32 சதவீதம் தமிழர் வாக்குகள் உள்ளது என்பதை அவர் மறந்து விடக்கூடாது. பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்ற சிந்தனை எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை தமிழக விவசாயிகள் ஒற்றுமையாக திரண்டு முறியடிப்பார்கள் என்றார்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தற்போது 135.60 அடியாக உள்ளது. வரத்து 1114 கன அடி. நேற்று வரை 1885 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2016 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6017 மில்லியன் கன அடி.

    வைகை அணை நீர் மட்டம் 58.92 அடி. வரத்து 1756 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 3406 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.40 அடியா கவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 70.15 அடியாகவும் உள்ளது.

    ×