search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரக்யா சிங்"

    பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் மன்னிப்பு கோரினார்.



    இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மாவ் தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ.வும், மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான உஷா தாக்குரிடம் ஒரு செய்தி சேனல் பேட்டி கண்டது. “கோட்சேவை தேசியவாதியாக கருதுகிறீர்களா?” என்று நிருபர் கேட்டதற்கு, “ஆமாம், அவர் தேசியவாதிதான். தனது வாழ்நாள் முழுவதும் அவர் நாட்டைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார். காந்தியை கொலை செய்ய எந்த சூழ்நிலையில் முடிவு எடுத்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று உஷா தாக்குர் பதில் அளித்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உஷாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ என்று பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    கோட்சேவை தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியது தொடர்பாக கருத்து தெரிவித்த அமித் ஷா, தனி நபர் கருத்துக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது என கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தின்போது கோட்சே ஒரு தீவிரவாதி என கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    இதையடுத்து பிரக்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திக் விஜய் சிங் கூறுகையில், 'பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

    இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், ‘ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யா தாகூர்,  நளின் கட்டேல் ஆகியோரின் கருத்துகளுக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது. இவை தனி நபரின் கருத்தாகும். பாஜக இதில் எதுவும் செய்ய முடியாது.

    அவர்கள் சொன்ன கருத்துக்கு அவர்களே மன்னிப்பு கேட்டு விட்டார்கள். பாஜக அவர்கள் கருத்துகளை  தீவிரமாக எடுத்துக் கொண்டு, இதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளது. இந்த குழு, மூவரிடமும் அவர்கள் கருத்துகள் தொடர்பாக விளக்கம் கேட்டு 10 நாட்களுக்குள் அறிக்கையை பாஜகவிடம் சமர்ப்பிக்கும்’ என கூறினார்.  
    மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் இன்று சாலை வழியாக பேரணி நடத்தி வாக்கு திரட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’’ என்று பிரசாரத்தின்போது பேசினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகூரிடம் இதுகுறித்து உங்களது கருத்து என்ன? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.



    கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் தனது கடந்த வாரம் அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று குறிப்பிட்டார்.



    பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கமலின்  இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங்  நேற்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராகதான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான திக் விஜய் சிங் கூறுகையில், ‘நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என பிரக்யா  புகழ்ந்து கூறியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம் ஆகும். பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

    இந்நிலையில் பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், நேற்று பாஜகவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரக்யா ‘நான் கூறிய கருத்து யாரையாவது பாதித்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
    போபால்:

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

    மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

    மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.

    ×