search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தாக்குதல்"

    • அதே ஓட்டலில் 1.5 வருடமாக அப்பெண் பணி புரிகிறார்
    • உதவி கேட்டு அப்பெண் அலறும் வீடியோ, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

    இந்தியாவில் பாலியல் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் தலைநகர் புது டெல்லி ஒன்று.

    புது டெல்லியை அடுத்த ஆக்ராவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ஒரு பெண் வேலை செய்து வந்தார். அவர் அங்கு சுமார் 1.5 வருட காலமாக பணி புரிகிறார்.

    அப்பெண்ணை அங்குள்ள அறையில் தங்கியிருந்த 4 ஆண்கள், தகாத உறவிற்காக தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர் மறுக்கவே அவரை பலவந்தமாக உள்ளே இழுத்தனர். இதை எதிர்பார்க்காத அந்த பெண் உரக்க கூக்குரலிட்டு உதவி கேட்டு அலறினர்.

    ஆனால், அவரது அலறலை பொருட்படுத்தாத அந்த 4 பேரும் அவரை உள்ளே இழுத்து வலுக்கட்டாயமாக அவர் வாயில் மதுவை ஊற்றினர். பிறகு அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினர்.

    இச்சம்பவம் அந்த ஓட்டல் அறை கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    அந்த வீடியோவில் அந்த பெண் "தயவு செய்து காப்பாற்றுங்கள்" (Please help me!) என அலறுவதும், அவரை ஒரு ஆண் உள்ளே இழுப்பதும், அவர் தரையில் கிடப்பதும், காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, ஆக்ரா பகுதிக்கு உட்பட்ட டாஜ்கஞ்ச் காவல்நிலைய அதிகாரி சதர் அர்ச்சனா சிங் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை அந்த 4 ஆண்களுடன் ஒரு பெண்ணையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    • அப்பணிக்கு தேவையான தகுதி சான்றிதழ்களை பெற்றவர், மேத்யூ
    • லகுனா பீச் பகுதி தம்பதியினர் முதல் முதலாக புகார் அளித்தனர்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா (Costa Mesa). இப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி (Matthew Zakrzewski).

    மேத்யூ, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பல இல்லங்களில் பல்வேறு சமயங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்து வந்தார். இவ்வேலைக்காக பெற்றோர்கள் தேடும் நபர்களில் முக்கியமானவராக இருந்து வந்தவர் மேத்யூ. அவரது அதிகாரபூர்வ வலைதளத்தில் தன்னை "அசல் குழந்தை பராமரிப்பாளர்" (original babysitter) என விளம்பர படுத்தி கொண்ட மேத்யூ, தன்னை குழந்தைகளுக்கு ஆலோசகராகவும், மூத்த சகோதரனாகவும், விடுமுறை காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்பவராகவும் முன்னிலை படுத்தி கொண்டார்.

    அந்த பணிக்கு அந்நாட்டில் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    2019 மே மாதம் அம்மாநில லகுனா பீச் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, அக்குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி புகாரளித்தனர்.

    உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மேத்யூ முன்னர் பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளையும் அவர்களின் பெற்றொர்களிடமும் விசாரணையை தீவிரமாக்கிய போது அவர் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும் தெற்கு கலிபோர்னியாவில் பல வீடுகளில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் இக்குற்றத்தை புரிந்திருப்பதையும் கண்டு பிடித்தனர்.

    மேலும், 2014 ஜனவரி 1லிருந்து 2019 மே 17 வரை மேத்யூ 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில் அந்நாட்டு ஜூரி அமைப்பு அவர் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

    குறைந்தபட்சமாக அவருக்கு 690 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்க இருக்கிறது.

    இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர உதவிய காவல்துறையையும், சாட்சியம் அளித்த குழந்தைகளையும், தயக்கமின்றி புகாரளித்த பெற்றோர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் சகஜம்
    • குற்றவாளியின் கொடூர செயலால் அவரது ஒரு மகள் கர்ப்பமடைந்தார்

    தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை அங்கு வழக்கமான ஒன்று.

    மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார்.

    இங்குள்ள 53 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்கள் இருக்கின்றனர். இவர் 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, தனது சொந்த மகள்களை முவார் பகுதியிலுள்ள பக்ரி மற்றும் ஜலன் ஜெரம் டெபி எனும் இரு பகுதியிலுள்ள வீடுகளில் கொண்டு சென்று பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

    இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.

    காவல்துறை சார்பாக ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் இவருக்கு மிக கடுமையான தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் குற்றவாளியான அவரது தந்தை, தனக்கென வக்கீல் வைத்து கொள்ளாமல், குற்றத்தை ஒப்பு கொண்டு, தான் மனம் வருந்துவதாகவும் அதனால் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதி அபு பக்கர் மனத், குற்றவாளி தனது கொடுமையான குற்றத்திற்காக உண்மையிலேயே வருந்தும் வகையில் அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், இத்துடன் 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

    சமீபத்தில் இதே போல், தனது 15 வயது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக ஜொஹோரில் ஒருவருக்கு 218 வருட சிறைத்தண்டனையும், 75 பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட்டது.

    மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் இந்தியாவிலும் கொண்டு வரப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மயக்கம் தெளிந்த பல பெண்களுக்கு என்ன நடந்தது என நினைவில்லை.
    • புகார் அளிக்கப்பட்டதையடுத்து டாக்டர் செங்கை மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.

    அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி புரிந்தவர் 33 வயதான ஜி ஆலன் செங் (Zhi Alan Cheng). இவரது இல்லம் அஸ்டோரியா பகுதியில் உள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், தனது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார் டாக்டர் செங். அங்கு அவரை மயக்கமடைய செய்திருக்கிறார்.

    மயக்கம் தெளிந்து அப்பெண்ணுக்கு நினைவு திரும்பியது. ஆனால் தனக்கு என்ன நடந்தது என அவருக்கு நினைவில்லை.

    அங்கு அவருக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில் டாக்டர் செங் அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருந்தன. இவை மட்டுமின்றி டாக்டர் செங் மேலும் சில பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் அதில் பதிவாகியிருந்தது.

    இது குறித்து அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து டாக்டர் செங்கை அந்த மருத்துவமனை பணிநீக்கம் செய்தது.

    இந்த விசாரணையின் போது டாக்டர் செங்கின் அலைபேசி, லேப்டாப் உள்ளிட்ட உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டாக்டர் செங், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையிலும், வீட்டிலும் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது பதிவாகியிருந்தது.

    இதனையடுத்து அவரது வீட்டை சோதனை செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஃபென்டனில், கீடமைன், எல்எஸ்டி மற்றும் அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உட்பட பல போதை மருந்துகளும் சிக்கின.

    தற்போது அவர் மீது சுமார் 50 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல், போதை பொருள் வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோதமாக பிறரை கண்காணிப்பது உட்பட பல பிரிவுகள் அடங்கும்.

    விசாரணையில் டாக்டர் செங் பெண்களை திரவ மயக்க மருந்துகளின் மூலம் மயக்கமடைய செய்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

    வீடியோவில் உள்ள பதிவுகளின்படி சில பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது.

    மருத்துவமனையில் டாக்டர் செங் துன்புறுத்திய ஒரு பெண் உட்பட அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்களை காவல்துறை கண்டறிய முயற்சிப்பதாகவும், தாய்லாந்து, நியூயார்க், லாஸ் வேகாஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல் அறைகளிலும், வீடுகளிலும் இவரால் பாதிக்கப்பட்ட 5 பேரை காவல்துறை தேடி வருவதாகவும் தெரிகிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் டாக்டர் செங் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×