என் மலர்
நீங்கள் தேடியது "பாரீஸ் ஒலிம்பிக்"
- 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு நடக்கிறது.
- இதற்காக பிரான்ஸ் அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது. பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இதற்கிடையே, பாரீஸ் ஒலிம்பிக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.
ரஷிய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்பார்கள். பாஸ்போர்ட் அடிப்படையில் எந்த நாட்டு வீரருக்கும் தடை விதிக்க முடியாது என கடந்த வாரம் ஐ.ஓ.சி. அறிவித்தது. இது நிகழ்ந்தால் பாரீஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என உக்ரைன் எச்சரித்தது. ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன.
இந்நிலையில், போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன.
இதுதொடர்பாக போலந்து விளையாட்டுத்துறை மந்திரி கமில் போட்னிக்சுக் கூறுகையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து புறக்கணிக்கும்போது பாரீஸ் ஒலிம்பிக்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- ஏற்கனவே 3 இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுகள் தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே நடந்த தகுதிச்சுற்று ஒன்றில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இதற்கிடையே, மற்றொரு தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத் பவார் (54 கிலோ), லாவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்னர்.
இந்நிலையில், 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீரர் ஆவார்.
- ரஷியா ஒலிம்பிக்கில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ரஷிய வீரர்கள் தனிப்பட்ட நடுநிலை வீரர்களாக பங்கேற்க முடியும்.
ரஷியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷியா பெயரில் பங்கேற்காமல் தனிப்பட்ட நடுநிலை வீரர்களாக பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் 14 வீரர்கள் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது. சைக்கிள் போட்டியில் பங்கேற்க 3 பேருக்கும, ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்க ஒருவருக்கும், மல்யுத்தம் போட்டியில் பங்கேற்க 10 பேருக்கும் அனுமதி அளித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
- 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.
- 2014 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 2014 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். தற்போது 21 பேர் கொண்ட துப்பாக்கிச்சுடுதல் குழுவுடன் பாரிஸ் செல்ல இருக்கிறார்.
ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டிற்கு தங்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு. தற்போது தந்தைக்காக நான் தங்கம் வென்று அவரது கனவை நிறைவேற்ற முயற்சி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பிரிவுகளில் கலந்து கொள்ளும் முதல் நபர் நான். பீகாரில் இருந்து துப்பாக்கிச்சுடுதல் அணியில் ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள தகுதி பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக கலந்து கொள்வதை மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். இன்று காலை 11 மணிக்கு தேசிய ரைபிள் சங்கத்திடம் இருந்து தகுதி பெற்ற செய்தியை பெற்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இவர் பீகார் மாநிலம் ஜமுய் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரி திக்விஜய் சிங்கின் மகள் ஆவார். இவருக்கு 32 வயதாகிறது.
- சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார்.
- ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்தியாவின் டென்னிஸ் வீரரான சுமித் நாகல், அதிகாரப்பூர்வமாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "நான் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக்ஸ் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருப்பதால் இது எனக்கு ஒரு மகத்தான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். தற்போது 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.
ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். போபண்ணா தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் தனது ஜோடியை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத தொடக்கத்தில் சுமித் நாகல் ஹெய்ல்பிரோன் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் முதல் 80 இடத்திற்குள் நுழைந்தார். இது தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலிய ஓபனில் முதன்மை சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். 37-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது.
- ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது. இதனை ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கர் ஏற்றி வைத்தார். இதன்மூலம் 30 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கி உள்ளது.
ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும். அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார்.

இது உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் இடத்தை வந்து அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
- அதிவேக பெண்மணியாக வலம் வரும் 31 வயதான தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
கிங்ஸ்டவுன்:
ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை எலைன் தாம்சன் ஹெரா, கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அதிவேக பெண்மணியாக வலம் வரும் 31 வயதான தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் அவருக்கு தசைநாரில் லேசான கிழிவும் ஏற்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கை தவற விடுவது மிகுந்த வேதனை அளித்தாலும், இறுதியில் விளையாட்டை விட உடல்ஆரோக்கியமே முக்கியம் என்று ஹெரா குறிப்பிட்டார்.
- 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
- இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும்.
பஞ்ச்குலா:
மாநிலங்களுக்கு இடையிலான 63-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்று தொடங்கியது.
இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும். இதை அடைந்த விட்ட கிரண் பஹல் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார்
'ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதை விட பெரிய சாதனை எதுவும் கிடையாது' என்று 23 வயதான கிரண் பஹல் நெகிழ்ந்தார்.
- பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
- ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இதற்கிடையே, ரஷியாவை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.
ரஷிய வீரர்கள் மெத்வதேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதேபோல் பெலாரஸ் அரினா சபலென்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் கூறுகையில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்றனர்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 28 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 28 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம் பெற்றுள்ளனர்.
நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
- ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன்.
- கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறியும் வீரரான அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு அவர் இந்த சாதனையை படைத்தார். மேலும் அவர் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா மீது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனென்றால் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டேன்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன். அதனால் நான் ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.
ஆனாலும் அதோடு ஒலிம்பிக்கை ஒப்பிட முடியாது. என் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை மறுக்க இயலாது. கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.






