search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதியார் பல்கலைக்கழகம்"

    • கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு 2024 ஜனவரி 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான கட்டணத்தை நவம்பர் 17-ந்தேதிக்குள் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு 2024 ஜனவரி 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கான கட்டணத்தை நவம்பர் 17-ந்தேதிக்குள் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

    • இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்: 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்கான, பகுதி நேரம், முழு நேர பிரிவின் கீழ், சேர்க்கை விண்ணப்பம் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

    இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாய் (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 500 ரூபாய்), இணையவழியாக செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 15ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    சேர்க்கை செயல்பாடுகள் ஜூன் 2023 பல்கலைக்கழக தரப்பில் நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
    • ஹிப்பாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.

    கோவை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில், தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 1,382 பேர் பி.எச்டி பட்டமும், 334 பேர் எம்.பில். பட்டமும் பெற்றனர்.

    மேலும், கலை பாடப்பிரிவில் 10 ஆயிரத்து 958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்து 907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36 ஆயிரத்து 856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846, வணிகவியல் பிரிவில் 27 ஆயிரத்து 469 என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

    இந்த விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் லாவ்லினா லிட்டில் பிளவர், பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில், திரைப்பட நடிகரும், இசை அமைப்பாளருமான ஹிப்பாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.

    விழாவில், அவர் பட்டம் பெற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சென்னையை மையமாக வைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு என மியூசிக்கல் அகாடமி திறக்க உள்ளேன். இதற்காக தான் ஆராய்ச்சி படித்து பட்டம் பெற்றேன். தற்போது, பி.டி மாஸ்டர் என்ற திரைப்படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.

    • பகுதி நேரம், முழுநேர எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பங்களை https://b-u.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    பகுதி நேரம் முழுநேர எம்.பில்., பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.

    விண்ணப்பங்களை https://b-u.ac.in/என்ற இணையதளம் வாயிலாக 15ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எம்.பில்., படிப்பிற்கு ரூ.750, பி.எச்டி., படிப்புக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். விபரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
    • கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் எம்.பில்) சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு -2023 நாளை 11-ம்தேதி நடக்கிறது. 51 பாடங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத்தேர்விற்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்விற்கான நுழைவு ச்சீட்டினை பாரதியார் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பொள்ளாச்சியில் என்.ஜி.எம்.கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது.

    தேர்வு காலை 11மணிக்கு துவங்கி மதியம் 12.30மணிக்கு நிறை வடையும். தேர்வாளர்கள் கடைபிடிக்க ேவண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. நுழைவுதேர்விற்கான பணிகளை பொது நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத்தலை வருமான பரிமேலழகன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 

    • தேர்வுக்கான ஹால்டிக்கெட் அந்தந்த மையங்களில், 24, 25, 26 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
    • விரிவான தகவல்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலையின் கீழ் அனைத்து எம்.பில்., பி.எச்டி., மாணவர்களுக்கான எழுத்து தேர்வுகள் மே 29, 31 மற்றும் ஜூன் 2-ந் தேதி நடைபெறவுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை மாணவர்களுக்கான தேர்வு மையம் பல்கலையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களை சேர்ந்த மாணவர்களுக்கு என்.ஜி.பி.,கல்லூரியில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரிவான தகவல்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    தேர்வுக்கான ஹால்டிக்கெட் அந்தந்த மையங்களில், 24, 25, 26 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இணையவழியில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.
    • சேர்க்கை பதிவுகள் நாளை 3-ந் தேதி முதல் தொடங்க உள்ளன.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறையில் இணையவழியில் இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. இதற்கான சேர்க்கை பதிவுகள் நாளை 3-ந் தேதி முதல் தொடங்க உள்ளன.

    இணையவழி கல்வி பிரிவின் கீழ், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., முதுநிலை பிரிவுகளின் கீழ் எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., எம்.காம்., நிதி மற்றும் கணக்கு பதிவியல், எம்.ஏ., தொழில்நெறி வழிகாட்டுதல் ஆகிய படிப்புகளின் கீழ், மாணவர் சேர்க்கை நடக்கிறது.இணையவழி படிப்புக்கு விண்ணப்ப பதிவு, சேர்க்கை, கட்டணம் செலுத்துதல், தேர்வு, தேர்வு முடிவு அறிவிப்பு, சான்றிதழ் வழங்குதல் என அனைத்தும் இணையவழியில் மட்டுமே நடைபெறும்.மேலும் விபரங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் விண்ணப்ப பதிவுகளை 3ந் தேதி முதல் 31ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    திருப்பூர் :

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போராட்டம் காரணமாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மருதமலை அடிவாரம் அருகே பாரதியார் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரடி வகுப்பிலும், தொலை தூர கல்வி மூலமும் படித்து வருகின்றனர்.

    கல்லூரியில் நேரடி வகுப்பில் படிக்கும் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில் 1500 மாணவிகள் விடுதியில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விடுதி மாணவிகள் இன்று காலை 150 பேர் திடீரென கல்லூரி முன்பு உள்ள கேட்டை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, தங்கள் பயன்படுத்தும் தட்டு, பக்கெட்டை வைத்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    மாணவிகள் விடுதியில் 1500 பேர் தங்கி படித்து வருகிறோம். இங்கு சரியான உணவு வழங்கப்படுவது இல்லை, தண்ணீரும் போதுமான அளவு வழங்கப்படுவது இல்லை, விடுதி முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து 4 மாதங்களாக வார்டன், சூப்பிரவைசர், பதிவாளரிடம் புகார் அளித்து வந்தோம்.

    மேலும் கல்லூரியில் உள்ள புகார் பெட்டியில் கடிதம் எழுதி போட்டோம். ஆனால் அந்த பெட்டி இதுவரை திறக்கப்படவில்லை. பாரதியார் பல்கலைகழகத்தில் 8 விடுதிகள் உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு 8 விடுதிகளுக்கும் தனித்தனியாக உணவு சமைக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது 1500 மாணவிகளுக்கும் ஒரே இடத்தில் சமைக்கப்படுகிறது. இதனால் உணவு தரம் இல்லாமலும், உணவில் புழு, வண்டு உடன் பரிமாறப்படுகிறது. விடுதியில் உணவுக்காக ரூ.3000 முதல் 4000 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம்.

    நாங்கள் விடுப்பில் சென்றால் அந்த தொகையில் எந்த மாற்றமும் இல்லாமல் வசூலித்து வருகிறார்கள். ஆனால் உணவில் தரம் மட்டும் இல்லை. எனவே இதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டோம். உணவின் தரம், குடிநீர், நாங்கள் பயன்படுத்தும் தண்ணீர், விடுதியின் சுத்தம் ஆகியவற்றுக்கு எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி மற்றும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வடவள்ளி பஸ் முனையத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • 75-வது சுதந்திர திருநாளில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியேற்றும் விதமாக அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

    வடவள்ளி:

    75- வது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் விடுதலைப்போராட்ட வீரர்களை நினைகூறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    கோவை மருதமலை சாலை, வடவள்ளி பஸ் முனையத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சுப்பிரமணிய சிவா, தீரன் சின்னமலை ஆகிய விடுதலைப்பேராட்ட வீரர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 75-வது சுதந்திர திருநாளில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியேற்றும் விதமாக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

    இந்த பேரணியில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல், ஆட்சிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்றுத்துறை ஆசிரியர் சுந்தரபாண்டியன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மஞ்சு புஷ்பா, கொங்குநாடு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் வேல்முருகன், சித்ரா, மெய்யலகன், அமுதலட்சுமி உள்பட கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சிறப்பாக செய்து இருந்தார்.

    ×