search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National flag hoisting awareness rally"

    • வடவள்ளி பஸ் முனையத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • 75-வது சுதந்திர திருநாளில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியேற்றும் விதமாக அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

    வடவள்ளி:

    75- வது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் விடுதலைப்போராட்ட வீரர்களை நினைகூறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    கோவை மருதமலை சாலை, வடவள்ளி பஸ் முனையத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சுப்பிரமணிய சிவா, தீரன் சின்னமலை ஆகிய விடுதலைப்பேராட்ட வீரர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 75-வது சுதந்திர திருநாளில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியேற்றும் விதமாக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

    இந்த பேரணியில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல், ஆட்சிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்றுத்துறை ஆசிரியர் சுந்தரபாண்டியன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மஞ்சு புஷ்பா, கொங்குநாடு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் வேல்முருகன், சித்ரா, மெய்யலகன், அமுதலட்சுமி உள்பட கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சிறப்பாக செய்து இருந்தார்.

    ×