search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க.வினர்"

    • மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் ரெயிலுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர். அவர்கள் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். ரெயில் மதுரைக்கு வந்தபோது மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க கரகாட்டத்துடன் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மேயர் இந்திராணி, மாநில பா.ஜ.க. பொதுச் செய லாளர் ராமசீனிவாசன், பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர் சுப்பாநாகுலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை பாலமுருகன், ஊடக பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஓம்சக்தி தனலட்சுமி, தமிழிசை சவுந்தரராஜன் நற்பணி இயக்க நிர்வாகிகள் நாச்சியப்பன், கருப்பையா, ரெயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக பா.ஜ.க. வினர் ரெயிலில் பயணம் செய்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய மந்திரி முருகன் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    • சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்
    • விவசாயி உயிரிழந்த சம்பவத்தில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காசங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 52). விவசாயி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி செந்துறை ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை செல்ல விடாமல் செந்துறை போலீசார் வழிமறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் செந்துறை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    • மாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலையை கைது செய்ததை கண்டித்து, குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கடலூரில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் தலைமையில் நிர்வாகிகள் காரைக்கண்ணன், வெற்றிவேல், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல், சுரேஷ் பிச்சை பிள்ளை, அக்னி கிருஷ்ணமூர்த்தி, மேகநாதன், விஜி, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் திடீரென்று சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறுகையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் சாதி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. 

    ஆகையால் ஜாதி வன்கொடுமையின் கீழ் மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, வினாத்தாள் தயார் செய்த பல்கலைக்கழக பேராசிரியர் மீதும் துணைவேந்தர் மீதும் சட்டப்படி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.

    ×