search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பளு தூக்கும் போட்டி"

    • சஞ்சிதா சானுவை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை இழக்க நேரிடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளு தூக்கும் வீராங்கனைகளில் ஒருவர் சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். குஜராத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியின்போது அவரது சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

    இனி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து தடுப்புக் குழுவின் முன்பு சஞ்சிதா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் அவர் போட்டிகளில்பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்படலாம். அத்துடன், அவர் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழக்க நேரிடும்.

    மூத்த வீராங்கனை ஊக்கமருந்து வலையில் சிக்கியிருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • 1200 வீரர்,30 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
    • வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    இந்திய பளு தூக்கும் சங்கம் நடத்தும் தேசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    யூத், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக உடல் எடை அடிப்படையில் 30 பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டி யில் அனைத்து மாநிலங்க ளையும் சேர்ந்த 1200 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய பளு தூக்கும் சங்க தலைவர் சகாதேவ் யாதவ், அகில இந்திய துணை தலைவரும், தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவருமான பொன் ராபர்ட்சிங், அகில இந்திய பொது செயலாளர் ஆனந்த கவுடா மற்றும் மாநில் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறு வார்கள். எனவே முன்னணி வீரர்கள், சாதனையாளர்கள், சர்வதேச வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள் கின்றனர்.

    • பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.
    • வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.

    அவினாசி :

    ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

    இதில், அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய உள் பிரிவுகளில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.

    அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் 150 கிலோ பிரிவில் வெள்ளியும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் ஆகிய உள்பிரிவுகளில் தங்கம், டெட் லிப்ட் பிரிவில் வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தாா்.அவிநாசிக்கு வந்த வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்று, பாராட்டுத் தெரிவித்தனா்.

    ×