search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவு செய்ய வேண்டும்"

    • சாகச சுற்றுலா, கேரவன் பஸ் நடத்துபவர்கள், கேரவன் பார்க்கு நடத்துபவர்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • பதிவு செய்யாத நிறுவனங்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுலா சார்ந்த தொழில்களான உணவு மற்றும் உறைவிடம், கூடார சுற்றுலா (கேண்டீன்), சாகச சுற்றுலா, கேரவன் பஸ் நடத்துபவர்கள், கேரவன் பார்க்கு நடத்துபவர்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த தொழில் செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பதிவு செய்யாத நிறுவனங்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரத்யேகமாக உள்ள இணையதள முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள முடியும். இது குறித்து உரிய தகவல்களை கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் 73977 15680 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

    இதுவரையில் சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் சுற்றுலா தொழில் புரிபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி உத்தரவின்படியும், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி அறிவுரையின்படியும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) கடந்த 15-ந் ேததி காணொலி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறையில் படிவம் III சான்று பெற்று வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை தொழிலாளர் நலத்துறையின் மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்கள் உணவு நிறுவன உரிமம் பெற்று, தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், சுயவேலைசெய்வோர், வேளாண் தொழில், உள்ளாட்சி அமைப்புகளில் ( மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி) பணிபுரிவோர், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விபரங்களை வேலையளிப்பவர் மேற்படி வலைத்தளத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேற்காணும் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை https://labour.tn.gov.in/ism/ என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆய்வின் சமயம் கண்டறியப்படும் நேர்வில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற முடியும்.
    • கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு, தாசில்தார் சிவசங்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் தங்கள் நிலத்தின் விபரங்களை 'கிரெய்ன்ஸ்' இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பட்டு வளர்ச்சி, கூட்டுறவு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட, 13 துறைகளின் நலத்திட்ட உதவிகளை எளிதில் பெற முடியும்.

    அதற்காக விவசாயிகள் தங்களது ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், நில உரிமைச்சான்று, கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன் விலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

    எனவே பெருந்துறை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பபில் அவர் கூறியிறுப்பதாவது:-

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி கள் 2022-2023 மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பொதுபிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 1500 மீ (பெ), 3000 மீ), குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.

    12 முதல் 19 வயது வரை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம் (100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 110மீ மற்றும் 100மீ) தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல்கையுந்துபந்து, மேசைப்பந்து, போட்டிகளும், மாற்றுதி றனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீ ஓட்டம், இறகுபந்து-5நபர், பார்வை த்திறன் மாற்று த்திறனாளி 100மீ ஓட்டம், 7 நபர் மனவளர்ச்சி குன்றியோர் 100 மீ ஓட்டம், எறிபந்து- 7 நபர், செவித்திறன், மாற்றுத்தி றனாளி 100 மீ ஓட்டம், கபடி-7நபர் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, தடகளம் 100மீ, 1500மீ, 3000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3,000, 2-ம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000, மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்துபந்து, முதல் பரிசு ரூ.36,000 2-ம் பரிசு ரூ.24,000 3-ம் பரிசு ரூ.12,000 மற்றும் கால்பந்து, ஹாக்கி முதல் பரிசு ரூ.54,000, 2-ம் பரிசு ரூ.36,000, 3-ம் பரிசு ரூ.18,000, வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்ப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்- 99435 09394, 86757 73551, 74017 03485, ல் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிதந்து கொள்ளலாம். இந்த விளையாட்டு போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வீரர், வீராங்க னைகளும் பெரும் அளவில் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    பசுமை போர்வைக்கான இயக்கத்திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புறசூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர்சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்"- செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வியக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செம்மரம், மகாகனி, ரோஸ்வுட், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, புளியன், கடம்பு, வாகை உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    அதற்கான மரக்கன்றுகள் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இம்மரக்கன்றுகள் வரப்பு ஓரங்களிலும், வயல் முழுவதும் நடவு செய்யலாம். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

    பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்வார். பின்னர் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல், தோட்டக்கலை விரிவாக்க மைய நாற்றாங்காலில் இருந்து பெற்று நடவு செய்துகொள்ளலாம். முன் உரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளதால் மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது சம்மந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும்.

    கோவை:

    அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக www.eshram.ov.in என்ற வலைத்தளத்தின் மூலம் கட்டுமான, புலம் பெயர்ந்த, விவசாய தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், தச்சுவேலை செய்பவர்கள், கல்குவாரி, முடி திருத்துவோர். தெரு வியாபாரிகள், சிறுவியா பாரிகள், ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நெசவாளர் பதிவுகள், மீனவ மற்றும் செங்கல் சூளை, தையல், சாயப்பட்டறை, பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் உள்பட 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

    மாநில அரசின் பல்வேறு வகையான நலவாரியங்க ளின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் கட்டாயம் இந்த தரவு தளத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்து கொள்ள 18 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமானவரி செலுத்துபவராகவும், இ.எஸ்.ஐ., வருங் கால வைப்புநிதி பிடித்தம் செய்யும் பணியாளர்களாக வும் இருக்கக்கூடாது.

    ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணை க்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவு தளத்துக்கு சென்று தாங்களாகவே சுயபதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங் கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் வேலை மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக புலம் பெயர இருந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற உதவியாக இருக்கும்.

    மேலும் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு விபத்து காப்பீடு இலவசமாக செய்யப்பட்டு விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு உடல் ஊனம் ஏற்பட்டாலோ ரூ.2 லட்சமும், பகுதியளவு உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அத்துடன் மத்திய அர சால் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பங்களி ப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்கள் மூலமும் பயன்பெறலாம்.

    அத்துடன் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேலைவாய்ப்பு இணையதளம் இந்த வலைத்தளத்தில் இணை க்கப்படுவதால் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பை எளிதில் பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  

    ×