search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்"

    • துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார்.
    • பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்யலோகம் சென்றார்.

    ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு சவுடுகர் மகரிஷிகள் சூத முனிவரை ஸ்ரீ சைலஷேத்திரத்தின் பெருமையை அறிய அணுகினார். அப்போது ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரத்திலிருந்து நரசிம்மர் பற்றிய புராணத்தைக் கூறியதாக வடமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு அளிக்கப்படுகிறது.

    தேவ சபையில் சகல சுத்த குணம் பொருந்தியவர் மகாவிஷ்ணுவே என்ற கருத்து இருந்தது. அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார். துர்வாச முனிவர் ராஜகோளத்தில் பிரம்மாவும், மகாலட்சுமியும் தாமச உலகில் ஈஸ்வரனும், சரஸ்வதியும் சத்வகுண உலகில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார்.

    சரஸ்வதியை நான்முகனும், ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மகாவிஷ்ணுவும் மணந்ததாகக் கூறினார். சகலவிதமான பொறுமையுடன் ராஜ கோலத்தில் பிறந்த மகாலட்சுமியை வகித்து உலகத்தைக் காப்பாற்றி வருவதால் மகாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர்.

    இதைக்கேட்ட இந்திரன் இதனைப் பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார். பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்யலோகம் சென்றார். அங்கு மகாவிஷ்ணு நித்திரையில் இருந்தார்.

    துர்வாச முனிவரின் வேகத்தைக் கண்ட துவார பாலகர்கள் அவரைத் தடுக்கவில்லை. தான் வந்தும் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன் மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார்.

    மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல் சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள் உதைத்ததால் மார்புப் பகுதி புனிதம் அடைந்ததாகவும் தங்கள் பாதம் வலிக்குமே எனக் கூறி முனிவரின் பாதத்தை வருடினார். உடனே துர்வாசர் தெளிவடைந்து மகாவிஷ்ணுவிடம் பிழை பொருத்தருளுமாறு கேட்டார்.

    இட்ட பணியை செய்யத்தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதிகளாக) இருப்பிடம் அடைவீர்! என தண்டனை கொடுத்தார்.

    பகவானை பிரிய மனமற்ற துவாரபாலகர்கள் கட்டளையின்படி மூன்று பிறவிகள் விரோதிகளாகப் பிறக்கிறோம். ஆனால் தங்களாலேயே மரணம் அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார்.

    அவர்கள் அரக்கன் மதுகைடகர்போல் துவார பாலகர் இருவரும் இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சன் ஆகப்பிறந்து இரண்யாட்சன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்துகொள்ள மகாவிஷ்ணு யக்ஞவராக அவதாரம் எடுத்து வதம் செய்து பூமிதேவியைக் காப்பாற்றினார்.

    இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரமசிவனிடமிருந்து 50 கோடி ஆட்களையும் தேவர், மானுடர், நீர், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு வேளைகளில் சாகா வரம் பெற்றார்.

    பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்வித யாகமும், பஜனைகளும் நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக, இரணியன் மகனாகப் பிறக்க கட்டளையிட்டார்.

    கருவிலேயே நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனைத் தக்க வயதில் குருகுலத்திற்கு இரணியன் அனுப்பினான். இரணியன் கட்டளைப்படி 'இரணியாய நமக' என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் `ஓம் நமோ நாராயணாய நமக' எனக் கூறினான்.

    பலவகைகளிலும் தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன். கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள் கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன காத்தன.

    இதனைக்கண்ட இரணியன் பிரகலாதனிடம், நாராயணனை எனக்கு காட்டு' எனக்கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான். அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்த நரசிம்மமூர்த்தி காட்சியளித்தார்.

    அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனைத் தன் சிங்கநகம் போன்ற கூரிய நகத்தால் அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமத் நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல பயந்தாள். பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து அருள்பாலித்தார். அவனும் அதுமுதல் பூஜித்து வரலானான்.

    அதுமுதல் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலையருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவமியற்றினாள்.

    திரேதா யுகத்தில் ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமயமலையை வாயுபகவானின் உதவியுடன் தாண்டி சிரஞ்சீவி மலையை பெயர்த்துவந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பிவிட்டு பழையபடி சஞ்சீவி மலையை வைத்துவிட்டுத் திரும்பினார்.

    அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாளக்கிராம மலையைப் பார்த்தார். அதில் ஸ்ரீ நரசிம்மர் பாவித்திருப்பதைக் கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காகப் பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயணித்தார்.

    சூர்யோதயக் காலம் நெருங்குவதைக் கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்யத் தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர்நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்துவிட்டு அனுஷ்டானம் செய்தார். திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    அப்பொழுது ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள்பாலித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்குப் பின்பு திரேதாயுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும் இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்திற்காக சாளக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்துவந்து ஸ்தாபிக்கப்பட்டார்.

    ஷராப்தி நாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதினாலும் உதரத்திலும் ரட்சிப்பதாலும் இந்த நாமக்கல் நகரம் ஸ்ரீ சைலசேத்திரம் என்றும் ஸ்ரீ சைலகிரி என்றும் கார்கோடகன் நற்கதியடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் கூறப்படுகிறது.

    • ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.௩௦ மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    * ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இருசக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    * வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.

    * ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ஷேகம் 2009-ம் ஆண்டு நடந்தது.

    * ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    * ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளை தாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    * தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    * மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்ப டுகிறது.

    * அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

    * ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.

    * ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணை பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

    * நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    * ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    • ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டன.

    மகா கும்பாபிஷேகம்

    இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (1-ந்தேதி) ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் முன்பு வாழை, செங்கரும்பு, காய்,கனிகளால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் அலங்கார பந்தலுடன் யாகசாலை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 7.15 மணி அளவில் வருண தீர்த்தம், புனித படுத்துதல் அனுதின ஹோமம், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, தாரா ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், திருவாராதனம், சக்தி சங்கரஹணம், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ரயாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு எனும் மகா கும்பாபிஷேக பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடை பெற்றது. ஆஞ்சநேயர் சாமி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    அதனை தொடர்ந்து 10.45 மணிக்கு தசதரிசனம், சிறப்பு திருவாராதனம், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், பிரம்ம ேகாஷம், அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்ய பஹுமானம், காலை 11.45 மணிக்கு ஸர்வ தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, செல்வசீராளன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைதலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் டி.டி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

     பக்தர்கள் குவிந்தனர்

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் முழங்க ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட நேரம் நின்று வரிசையில் இரும்பு தடுப்புகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை காண அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.

    கோவில் மற்றும் கோவில் வளாகம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. விழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்தனர். இதேபோல் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தப்படி இருந்தனர்.

    பக்தர்களுக்கு பல்வேறு குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

     தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்துதுறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இக்கோவிலில் நாளை (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து இன்று காலையில் வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல், சயனாதி வாசம், சகல தேவதைகளை வரவழைத்து விசேஷ பூஜை, பிரதான வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து துறை, நகராட்சி, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் கும்பாபிஷேகத்துக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.

    விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவில் அறங்காவல் குழுத் தலைவர் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இன்று காலை முதலே கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
    • 2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்ம சுவாமி கோவில், அரங்கநாத சுவாமி கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சேகர்பாபு தெரிவித்ததாவது:-

    கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். திருப்பணிகள் தொடங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

    அருகில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் ஆய்வு செய்தோம். இந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சிதிலமடைந்த பழைய தல விருட்சக மரத்தின் பாகங்கள் கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் ரமேஷ், கோவில் உதவி ஆணையர் இளையராஜா, கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • ஆஞ்சநேயருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினந்தோறும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

    ×