search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி பண்டிகை"

    • பாடலுக்கான வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.
    • பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடிய 'கார்போ' என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

    இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை 'கார்போ' பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது.
    • ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    திண்டுக்கல்:

    புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசைக்கு மறு நாள் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். அப்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். வீடுகளில் அமாவசை தினத்தன்றே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு கொலு பொம்மைகள் வைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும்.

    நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து சிறப்பு வழிபாடு செய்து பிரசாதங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தற்போதே விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனை திண்டுக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது. அஷ்டலட்சுமி, கார்த்திகை பெண்கள், தசாவதாரம், மீனாட்சி திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட செட் பொம்மைகள், மகாத்மா காந்தி, பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பொம்மைகளும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    வருடந்தோறும் புதுவகையான செட் பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி இந்த நவராத்திரிக்கு ஐஸ்வர்ய ஈஸ்வரன், நவ நரசிம்மர், தத்தாத்ரேயர் என்ற புதிய செட் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் ரூ.6 ஆயிரம் வரை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. செட் பொம்மைகள் ரூ.850 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து பெண்கள் கூறுகையில், நவராத்திரி விழா பெண்கள் வழிபட கூடிய முக்கிய விரதங்களில் ஒன்று. 9 நாட்கள் விரதமிருந்து, ஏழை எளியவர்களுக்கு முடிந்ததை தானம் செய்து வழிபடும் போது குடும்பத்தில் சுபிட்சம் மற்றும் செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு அமையும் என்பது ஐதீகம். அதனால் நவராத்திரி விரதத்தை பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×