search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லடக்கம்"

    • முஸ்லீம்களை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கித்தர வேண்டும் என அமைச்சருக்கு மஸ்ஜிதே இப்ராகிம் பள்ளி வாசல் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அமைச்சர் தனி கவனம் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை இஸ்லாமிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மதுரை

    மதுரை ஆனையூர் மஸ்ஜிதே இப்ராகிம் பள்ளி வாசல் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரை சிலையனேரி ஆனையூர் மற்றும் ரெயிலார் நகர், தினமணி நகர், கோவில் பாப்பாகுடி, விளாங்குடி பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவர்களது உடல் நல்லடக்கம் செய்ய 10 கி.மீ. தூரத்தில் உள்ள மகபூப் பாளையம் மைய வாடிக்கு உடலை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அங்குள்ள 10 செண்ட் நிலத்தில் பல வருடங்களாக 25 பள்ளிவாசலை சேர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அங்கு மண்ணின் தன்மை இழந்துவிட்டதால் உடல்கள் மக்குவதற்கு வெகு நாட்களாகிறது. எனவே அங்கு அடக்கம் செய்ய முடியவில்லை. எனவே ஆனையூர் மல்லிகை நகர் பொது மயானம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 17 செண்ட் நிலத்தை முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய ஒதுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கிழக்கு மண்டல உதவி ஆணையர் , மண்டல தலைவர் ஆகியோர் நேரில் வந்து இடத்தை பார்வை யிட்டு சென்றனர். ஆனால் அதன்பின் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமைச்சர் தனி கவனம் செலுத்தி குறிப்பிட்ட இடத்தை இஸ்லாமிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குப்பைகள், பாட்டில்களை எடுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார்.
    • சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    தருமபுரி,

    ஓசூர் அட்கோ காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மோரனப்பள்ளி கிராமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்ற ஆண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.

    இவர் அப்பகுதியில் குப்பைகள், பாட்டில்களை எடுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோத னை செய்து அவரது உடலை ஓசூர் அட்கோ காவல் நிலைய காவலர் அசோக், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கி ணைப்பாளர் அருணாச்ச லம், முஹம்மத் ஜாபர், தென்றல் ஆகியோர் தருமபுரியில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

    • ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.

    ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    • சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.
    • அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் வாழ்ந்து வந்த 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தெத்தி ஊராட்சி பகுதியில் அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.

    அப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால், நல்லடக்கம் செய்ய நாகூருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும், எனவே தெத்தி பகுதியிலேயே அடக்கத்தலம் அமைத்துத் தர வேண்டுமென்றும், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தெத்தி பகுதியில் முஹையதீன் அப்துல் காதர் மரைக்காயர் டிரஸ்டுக்கு சொந்தமான வக்பு இடத்திலிருந்து, 44.43 சென்ட் பரப்பளவு இடம் அடக்கத் தலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக, தெத்தி பகுதி மக்கள் எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×