search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்து எரிந்தது"

    • ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.
    • நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.

    இந்தநிலையில் ஏற்காடு மாரமங்களம் பஞ்சாயத்து கொம்புதூக்கி கூத்து முத்தல் கிராமம் மந்திரி தெருவை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராமன் (52) என்பவர் நேற்றிரவு வீட்டின் வெளியில் படுத்திருந்தார். வீட்டிற்குள் அவரது மனைவி தனம் (46), மற்றும் அவ ரது குடும்பத்தினரான ராஜேந்திரன் (29), சந்தியா (24), பிரபாகரன் (27), மகேஷ்வரி (24), வர்ஷிணி (3), கனிஷ்கா (1) ஆகியோர் படுத்திருந்தனர்.

    எரிந்து சாம்பல்

    இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தால் வீட்டில் வெளியில் படுத்திருந்த வெங்கட்ராமனின் கை மற்றும் கால் செயலிழந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் படுத்திருந்தவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

    ஆனால் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஏற்காடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

      சேலம்:

      சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள் (வயது 75). இவரது வீட்டின் மேற்கூரை கீற்று கொட்ட கையால் வேயப்பட்டதாகும். இவர் சமீபகாலமாக திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

      இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் உள்ள அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

      உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அக்கம் பக்கம் பரவ விடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் . ஆனாலும் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

      இந்த தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
      • உடனடியாக கவின் காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

      சென்னிமலை:

      சென்னிமலை டவுன் மணிமலை, காளிக்கோ ப்டெக்ஸ் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கவின் (23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

      இவர் தனது நண்பரின் காருக்கு கியாஸ் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னி மலையில் உள்ள கியாஸ் பங்குக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது அரச்சலூர் ரோடு அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் அடியில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்தது.

      இதனை அந்த வழியே ரோட்டில் சென்று கொண்டி ருந்தவர்கள் பார்த்து காரில் தீ எரிவதை கவினிடம் சத்தம் போட்டு தெரிவித்தனர்.

      பின்னர் உடனடியாக கவின் காரை ரோட்டோ ரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார்.

      அப்போது தீ மள, மள பரவியது. இதனால் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

      காரில் தீ எரிவதை ரோட்டில் சென்றவர்கள் பார்த்து சொன்னதால் கல்லூரி மாணவர் கவின் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

      • வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
      • ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

      அந்தியூர்:

      அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 60). விவசாயி. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

      இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்க ளுக்கு செல்வகுமார், தர்ம லிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமார் கோவையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை செய்து வருகிறார், தர்ம லிங்கம் டிரைவராக உள்ளார். இவர்கள் அனை வரும் அந்த பகுதியில் குடிசை வீட்டில் தங்கி வரு கிறார்கள்.

      இந்த நிலையில் சம்பவ த்தன்று செல்வகுமார் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதை யடுத்து வீட்டில் இரவு சந்திரசேகரன், குழந்தையம்மாள் தர்மலிங்கம் ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

      அப்போது வீட்டின் கூரையில் இருந்து புகை வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

      இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

      அதற்குள் வீடு எரிந்து விட்டது. இதில் வீட்டில் வைத்து இருந்த பள்ளி சான்றிதழ்கள், மார்க் சீட், ஆதார் கார்டு மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

      இது பற்றி தகவல் கிடை த்ததும் கிராம நிர்வாக அலு வலர் தமிழரசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தீஸ்வரன் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர்.

      இதை தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      • வண்டியில் துடைப்பங்களை வைத்து கொண்டு கிராம, கிராமமாக சென்று விற்பனை செய்து வருகிறார்.
      • வீட்டில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே டி.புதூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் வண்டியில் துடைப்பங்களை வைத்து கொண்டு கிராம, கிராமமாக சென்று விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் வியாபாரத்திற்காக வீட்டைபூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அங்கு மளமளவென்று வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து நந்தகுமாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சேதமானது.

      இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு வந்து எரிந்து கொண்டிருந்த தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் உடனே அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது போலீசார் விசாரித்ததில், வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் டி.வி., கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஆவணங்கள், நகை, பணம் என்று ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
      • இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.

      மொடக்குறிச்சி:

      மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (85).

      இவரது கணவர் பொன்னுசாமி, மகன் மணி, மகள் லட்சுமி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது மருமகள் பூவாய் நாமக்கல் மாவட்டம் வேலூரில் வசித்து வரு கிறார்.

      இந்நிலையில் சுந்தராம்பாள் சாவடிபாளையம் பகுதியில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

      இந்த நிலையில் இரவு சுந்தராம்பாள் இரவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.

      இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்த சுந்தரா ம்பாளை மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு நிலையத்தக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

      இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      ×