search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் இடி விழுந்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது
    X

    ஏற்காட்டில் இடி விழுந்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது

    • ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.
    • நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.

    இந்தநிலையில் ஏற்காடு மாரமங்களம் பஞ்சாயத்து கொம்புதூக்கி கூத்து முத்தல் கிராமம் மந்திரி தெருவை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராமன் (52) என்பவர் நேற்றிரவு வீட்டின் வெளியில் படுத்திருந்தார். வீட்டிற்குள் அவரது மனைவி தனம் (46), மற்றும் அவ ரது குடும்பத்தினரான ராஜேந்திரன் (29), சந்தியா (24), பிரபாகரன் (27), மகேஷ்வரி (24), வர்ஷிணி (3), கனிஷ்கா (1) ஆகியோர் படுத்திருந்தனர்.

    எரிந்து சாம்பல்

    இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தால் வீட்டில் வெளியில் படுத்திருந்த வெங்கட்ராமனின் கை மற்றும் கால் செயலிழந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் படுத்திருந்தவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

    ஆனால் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஏற்காடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×