வியாபாரியின் வீடு தீப்பிடித்து எரிந்தது

வண்டியில் துடைப்பங்களை வைத்து கொண்டு கிராம, கிராமமாக சென்று விற்பனை செய்து வருகிறார். வீட்டில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது.
வியாபாரியின் வீடு தீப்பிடித்து எரிந்தது
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே டி.புதூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் வண்டியில் துடைப்பங்களை வைத்து கொண்டு கிராம, கிராமமாக சென்று விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் வியாபாரத்திற்காக வீட்டைபூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அங்கு மளமளவென்று வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து நந்தகுமாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு வந்து எரிந்து கொண்டிருந்த தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் உடனே அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது போலீசார் விசாரித்ததில், வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் டி.வி., கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், ஆவணங்கள், நகை, பணம் என்று ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com