search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் செய்தி"

    • கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
    • ரத்னம் படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.

    இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.

    இப்படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.

    இந்நிலையில் நான்காவது சிங்கிளான "எதுவரையோ.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளர்.

    இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
    • இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் யோகி பாபு ஒருவர். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரஜினிகாந்தை கலாய்த்தும், கிண்டல் செய்தும் மக்கள் மனதை கவர்ந்திருப்பார்.

    யோகி பாபுவிற்கு பலப்படங்கள் லைன் அப்பில் இருந்தாலும். அதில் ஒன்று அவர் நடித்து வெளிவரப் போகும் படம் "மிஸ் மேகி." இதில் அவர் வயதான பெண்மணி வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

    மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார். இவர் செல்வராகவன் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி படக்குழுவினர் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம்

    சினிமாவை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் வைத்து படம் பார்க்க முடியாது.

    ஒரு நாளுக்கு ஒரு படம் மட்டுமே பார்க்க முடியும். ஒரு படத்தை 2 தடவைக்கு மேலாக பார்க்க முடியாது. பி.வி.ஆர் பாஸ்போர்ட் A-விற்கு மாதம் சந்தாவா 349 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு மாததிற்குள் 4 படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இது அடுத்த மாதத்திற்கு செல்லுபடி ஆகாது.

    பாஸ்போர்டின் இரண்டாம் B வகை மாதம் சந்தா ரூ.1047 செலுத்த வேண்டும். இதில், 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 90 நாட்களில் 12 படங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    திங்களில் இருந்து வியாழக்கிழமை வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் புதுபடங்கள் வெளிவருவதால் மக்கள் அந்நாட்களில் பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.

    பி.வி.ஆர் பாஸ்போர்ட்டை உபயோகித்து படம் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 87 ஆகவும், டிக்கெட்டுடன் சேர்ந்து கன்வீனியன்ஸ் ஃபீ செலுத்தி நாம் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஆன்லைனில் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்து டிக்கெட் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    பிவிஆர் பாஸ்போர்ட் ஏற்கனவே ஐதராபாத்தில் நடைமுறையில் உள்ளது. இப்போது, தெலுங்கானா, தமிழகத்திலும், கேரளத்திலும் அமலுக்கு வந்து இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×