search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மாநகராட்சி தேர்தல்"

    • டெல்லி மாநகராட்சி மேயர் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது.
    • இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வாா்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

    இதற்கிடையே, மாநகராட்சித் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக மாமன்றக் கூட்டம் நேற்று கூடியது. இதில், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற பிறகு, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    'ஆல்டா்மென்' எனப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த 10 உறுப்பினா்களை கவர்னர் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தார். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், டெல்லி அரசின் ஒப்புதலின்றி பரிந்துரைத்ததாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு எழுப்பியது.

    இந்நிலையில், நேற்று காலை டெல்லி மாமன்றக் கூட்டம் கூடியவுடன் நியமன உறுப்பினர்களின் பதவியேற்புக்கு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பா.ஜ.க, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கூச்சலிட்டதுடன் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இதில் சில கவுன்சிலர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கவுன்சிலர்கள் மேசை மற்றும் மேடையின் மேல் ஏறி ஒருவரையொருவர் தத்தளித்தனர். இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    • டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஆதேஷ் குப்தா பதவி விலகினார்.
    • கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஒருங்கிணைந்த மாநகராட்சியின் 250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ.க.வுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. டெல்லி மாநகராட்சி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றுள்ளது.

    இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா இன்று பதவி விலகினார். ஆதேஷ் குப்தாவின் ராஜினாமாவிற்கு ஒப்புதல் பா.ஜ.க. தலைமை அளித்துள்ளது.

    மேலும் துணை தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

    • பெரும்பான்மையை தாண்டி 130 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி.
    • உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாக மணீஷ் சிசோடியா கருத்து

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    பாஜக 99 வார்டுகளில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் தொகுதியில் ஷகீலா பேகம் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். 

    • ஆம் ஆத்மி கட்சி 104 இடங்களை வென்றதுடன் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
    • பாஜக 83 வார்டுகளில் வெற்றி பெற்றதுடன், 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது, இதன் மூலம் மொத்தம் 135 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெறும் என தெரிகிறது. டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற 126 வார்டுகளில் வெற்றி பெற்றால் போதும்.

    இதனையடுத்து 15 ஆண்டு காலமாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி பாஜக 83 வார்டுகளை வென்று 19 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளதாவது:  டெல்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அகற்றினார். தற்போது மாநகராட்சியில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியையும் அவர் அகற்றி உள்ளார். டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை, பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், தூய்மை மற்றும் உள்கட்டமைப்புக்காக வாக்களிக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது.
    • 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 113 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

    • 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன
    • மொத்தம் 42 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.

    கடந்த தேர்தலில் டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக இரண்டாவது இடமும், காங்கிரசுக்கு குறைந்த அளவிலும் இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக, மொத்தம் 42 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68 கண்காணிப்பாளர்கள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய 136 பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
    • மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது. மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்துள்ளது.

    இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்பின்பு, மாலை 4 மணி நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்த நிலையில், தேர்தல் நடந்து முடிந்த மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    • காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது.
    • மதியம் 2 மணிவரை மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது.

    மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்துள்ளது. இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இதன்பின்பு, மாலை 4 மணி நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    • டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மத்திய மந்திரி மீனாட்சி லேகி வாக்களிப்பு.
    • இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 7-ந் தேதி எண்ணப்படுகிறது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர். 


    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் சிவில் லைன்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும நேர்மையான கட்சிக்கு வாக்களியுங்கள். ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார். எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


    மத்திய மந்திரி மீனாட்சி லேகி, தெற்கு விரிவாக்கம் பகுதி 2ல் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த தேர்தலில் மக்களிடம் இருந்து தகுந்த பதிலைப் பெறுவார்கள் என்றார். சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பது உலகிற்கே தெரிந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 


    இந்நிலையில் சுபாஷ் மொஹல்லா வார்டில் பாஜகவிற்கு ஆதரவான 450 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது டெல்லி அரசின் பெரிய சதி என்றும், இது குறித்து புகார் அளித்து, இந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த மேல்முறையீடு செய்வோம் என்றும் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். 


    இதேபோல் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். டல்லுபுராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்கவில்லை. தமது மனைவி வாக்களித்துள்ளதாகவும், நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் தமது பெயர் இல்லை என்றும், அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


    இதனிடையே மாநகராட்சி தேர்தலில் காலை 10:30 மணி வரை 9 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 13,638 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர், மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும்7-ந் தேதி எண்ணப்படுகிறது.

    • டெல்லி மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
    • அனைத்து கடைகளும் இன்று மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.

    மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது.

    கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

    டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

    • டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன.
    • இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இதற்கிடையே, டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் எதிரொலியாக டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு இன்றும், வரும் 5-ம் தேதியும் விடுமுறை அறிவித்து மாநில கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    • டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • டெல்லியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி, நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    டெல்லியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

    ×