டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி

பெரும்பான்மையை தாண்டி 130 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி.உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாக மணீஷ் சிசோடியா கருத்து
மணீஷ் சிசோடியா,ஆம் ஆத்மி தொண்டர்கள்
மணீஷ் சிசோடியா,ஆம் ஆத்மி தொண்டர்கள்
Published on

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக 99 வார்டுகளில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் தொகுதியில் ஷகீலா பேகம் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com