search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய ஊறல் அழிப்பு"

    • 10-க்கும் மேற்பட்ட போலீசார் வெள்ளைக்கல் மலையில் வேட்டை நடத்தினர்
    • வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட போலீசார் நேற்று வெள்ளைக்கல் மலையில் சாராய வேட்டை நடத்தினார். போலீசாரை கண்டம் தப்பி ஓட முயன்றவரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சியதும் தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். இதனை அடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
    • சாராய கும்பலை தேடும் பணி தீவிரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்தி கேயன் உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு டி.எஸ்.பி.ரமே ஷ்ராஜ் மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை காட்டுப்பகுதி, தச்சம்பட்டு எல்லைக்குட்பட்ட மூஞ்சுராம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்காடு தன்னீர்பாரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்து 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் சுமார் 170 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

    மேலும் தலைமறைவாகி உள்ள சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்
    • 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சா ராயம் காய்ச்சு பவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடு பவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படிகள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை யில் தனிப்படை காவலர்கள் கல்வராயன் மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்     அப்போது குரும்பா லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்தி ருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர்மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.

    இதேபோல் கள்ளக் குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரனே ஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் ஆக மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்     மேலும் குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகி யுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்ற னர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சா ராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்  போலீஸ் சூப்பிரண்டு கல்வராயன் மலைப்பகு திக்கு நேரடியாக வந்து சாராய ஊரல்கலை அழித்த சம்பவம் அப்பகுதி போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குற்றவாளிகள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் கிராமிய தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிெரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் ஊராட்சி பூங்குளம் மலைப்பகுதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது சிலர் அடுப்புகள் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் சாராயம் காய்ச்சிய அடுப்புகளை உடைத்து அகற்றினர் மேலும் அங்கு 4 பேரல்களில் இருந்த 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சியவர்களை தேடி வருகின்றனர்.

    • வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்டுபிடிப்பு
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகு தியை ஒட்டியுள்ள மலைப்பகுதியான மாதகடப்பா காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக, வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாதகடப்பா பிரிவு வானவர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறை யினர் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது, அடர்ந்த வனப்பகுதியில், 250 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைய டுத்து, சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்த வனத் துறையினர், தப்பிச்சென்ற குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
    • சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணைபோலீஸ் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லன்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய பேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் போட்டு வைத்திருந்தவரை தேடி வருகின்றனர்.

    • அடுக்கம் பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அடுக்கம் மலையில் சுமார் 400 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.இது தொடர்பாக அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    ×