செஞ்சி அருகே மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டை: 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்டனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
கள்ள சாராயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பேரல்களை படத்தில் காணலாம்.
கள்ள சாராயத்துக்காக பயன்படுத்தப்பட்ட பேரல்களை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணைபோலீஸ் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லன்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய பேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் போட்டு வைத்திருந்தவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com