search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச விண்வெளி நிலையம்"

    • பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது.
    • ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்த இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.

    வாஷிங்டன்:

    பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015-ல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது.

    மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர். இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது போன்ற எதிர்கால நீண்ட தூர பயணங்கள், மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும். எனவே விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

    இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது. விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும், சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்டகால பயணங்களில் புதிய உணவின் மதிப்புமிக்க ஆதாரத்தை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.

    • தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
    • சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    கேப்கனவெரல்:

    சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்சின் தனியார் ராக்கெட் புறப்பட்டு சென்றது.

    இந்த ராக்கெட் அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது.

    சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ரய்யானா பர்னாவி, விமானப்படை பைலட் அலி அல்கர்னி மற்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்திவிட்சன், தொழில் அதிபர் ஜான்ஷோப்னர் என 4 பேர் விண்வெளிக்கு சென்றனர்.

    அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ்பால்கென்-9 விண்கலத்தில் பயணம் செய்தனர். இதில் தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.

    ஆக்சியம் ஸ்பேஸ் ஏஎக்ஸ்-2 திட்டத்தில் அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

    சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, சவுதி விமானப் படையின் விமானி அலி அல்-கர்னி அனுப்பப்பட்டுள்ளார்.

    ரய்யானா பர்னாவி, விண்வெளிக்கு சென்ற முதல் சவுதி அரேபிய பெண் என்ற பெருமையை பெற்றார். சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்தான் சவுதி அரேபியாவை சேர்ந்த வீரர், வீராங்கனையை தனியார் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

    ×