என் மலர்
இந்தியா

சுபான்ஷூ சுக்லாவிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி
- விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
- 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
விண்வெளி நிலையத்தினுள் சென்ற 4 வீரர்களை ஏற்கெனவே உள்ள வீரர்கள் வரவேற்றனர்.
இந்த 4 வீரர்களும் 14 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷூ சுக்லா உடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, சுக்லா கூறுகையில்," விண்வெளியில் இருந்து உலகை பார்த்ததும் ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுதான் எனத் தோன்றியது.
இங்கிருந்து பார்க்கும்போது எந்தவொரு எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. மாநிலங்களும் இல்லை, நாடுகளும் இல்லை. நாமெல்லாம் மனிதநேயத்தின் ஓர் அங்கம்.
உலகமே நமது வீடு, நாம் அங்கு வசித்து வருகிறோம். வரைப்படத்தில் காண்பதை விட விண்வெளியில் இருந்து மிகவும் பிரமாண்டமாக இந்தியா காட்சியளிக்கிறது" என்றார்.