search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு அமைப்பாளர்"

      தருமபுரி,

      தருமபுரி கலெக்டர் சாந்தி ஆலோசனைப்படி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்போடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

      அதன் ஒரு பகுதியாக 50 பேருக்கு ஒன்றியத்துக்கு 10 பேர் வீதம் தேர்வு செய்து தருமபுரி கடைவீதி வர்த்தகர் மஹாலில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.

      உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் மற்றும் குமணன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் சக்சம் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் தாரணி பயிற்சி வழங்கினார்.

      மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் வழங்கும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரித்து தரமானதாக வழங்க வேண்டும்.

      இந்த மேற்பார்வையாளர் பயிற்சி மேம்படுத்தும் எனவும் பயிற்சியில் வழங்கப்படும் கருத்துக்களை நன்றாக உள்வாங்கி தங்கள் பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு எடுத்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன் உணவு தயாரிக்கும் உணவு பாக்கெட் மூலப்பொருள்களில் லேபிள்களை கண்காணித்து முடிவு தேதிக்கு முன்பாக உபயோகம் மேற்கொள்ள வேண்டும் எனவும், எலி, கரப்பான், பல்லி மற்றும் பூச்சிகள் அண்டாமல் கண்காணித்து உணவு மையத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கூறினார்.

      தருமபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் கூறுகையில் அனைத்து சத்துணவு மையங்களும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் முறையாக புதுப்பித்து மையங்களில் மாட்டி வைத்திருக்க வேண்டும்.

      முடிவில் சத்துணவு அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

      • 2 பேருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
      • குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

      கன்னியாகுமரி :

      குலசேகரம் அருகே உள்ள அண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் (வயது 71). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

      இந்நிலையில் ராதா கிருஷ்ணன் வீட்டின் பின்பக்கம் வாயில் நுரை தள்ளியவாறு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

      டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இவர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பினத்தை கைப்ற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      • 40 பவுன் நகைகளை அள்ளி சென்றனர்
      • பூட்டை உடைத்து துணிகரம்

      தண்டராம்பட்டு:

      திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம் பட்டு அடுத்த பெருங்குளத்துாரைச் சேர்ந்தவர் தண்டபாணி (55). இவர் மனைவி அம்சா. சத்துணவு அமைப்பாளராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

      இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டை உ ட்புற மாக பூட்டிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் மாடியில் உள்ள அறையில் தண்ட பாணி படுத்து துாங்கினார். பின்னர், நேற்று காலை கீழே இறங்கி வந்தபோது, வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பதறியபடியே பீரோ வைத் துள்ள அறையில் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன.

      மேலும், அதிலிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ஹாலில் இருந்த டிவி ஆகி யவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.

      அதேபோல், அருகில் வசிக்கும் சக்கரபாணி என் பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கு பீரோ வில் இருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

      மேலும், அதே பகுதி யில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு, பீரோ வில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் ரூபாய் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.

      இதுதொடர்பாக, பாதிக்தனியே போலீஸ் ஸ்டேஷனில்கப்பட்ட 3 பேரும் தனித் தானிப்பாடி புகார் கொடுத்தனர். அதன் பேரில் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட் சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீ சார் அங்குவந்து, திருட்டு நடந்த வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவில் அடுத் தடுத்து 3 வீடுகளில் நகை, டிவிகள் மற்றும் பணம் திருடுபோன சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

      மக்கள் கோரிக்கை த ண்டராம்பட்டு, தானிப்பாடி ஆகிய பகுதி களில் இதுபோன்று வீடு - புகுந்து கைவரிசை காட்டும் சம்பவம் அடிக்கடி நடப்பதால், போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும். மேலும், தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எல் லைக்கு உட்பட்ட பெருங் குளத்தூர் பகுதியில் காப் புக்காடு இருப்பதால் நகை திருடும் மர்ம நபர்கள் அந்த காட்டுக்குள் சென்று பதுங் கிக்கொள்வதாக கூறப்படு கிறது. எனவே, இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத் தில், எஸ்பி தனிக்கவனம் செலுத்தி தண்டராம்பட்டு, தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற திருடு சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

      • வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் நேரில் சென்று திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சமையறையை பார்வையிட்டு, அங்கு உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? சமையல் பாத்திரங்கள் சரியாக கழுவப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
      • தலைமையாசிரியர் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி, சமையலர் ஜெயந்தி ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

      சேலம்:

      சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அடுத்த திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி மதிய சத்துணவு வழங்கப்பட்டது.

      அப்போது 3-ம் வகுப்பு மாணவிக்கு வழங்கிய உணவில் அட்டைப்பூச்சி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, சக மாணவிகள், ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

      இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் அட்டைப்பூச்சியை எடுத்து வீசி விட்டு அதே சத்துணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவிக்கு மறுநாள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

      இதை அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, சுகாதாரமற்ற முறையில் சத்துணவு தயாரிப்பதாக குற்றம் சாட்டினர்.

      இந்த சம்பவத்தை அடுத்து வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் நேரில் சென்று திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சமையறையை பார்வையிட்டு, அங்கு உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? சமையல் பாத்திரங்கள் சரியாக கழுவப்படுகிறதா? என ஆய்வு செய்தார். இதையடுத்து தலைமையாசிரியர் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி (வயது 58), சமையலர் ஜெயந்தி ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

      அதன் அறிக்கை கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் விமலாதேவியை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

      • ஊத்துமலை பழைய போலீஸ் நிலையம் அருகே முருகேசன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.
      • ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

      நேற்று முன்தினம் இரவு இவர் ஊத்துமலை பழைய போலீஸ் நிலையம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் முருகேசனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.

      இதுதொடர்பாக ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், ஒருதலை காதல் விவகாரத்தில் முருகேசனை, பக்கத்து ஊரான வீராணத்தை சேர்ந்த செல்வமுருகன்(28) என்பவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து வெட்டி–க்கொலை செய்தது தெரியவந்தது.

      3 தனிப்படைகள்

      இதையடுத்து செல்வமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

      கொலையாளிகள் 4 பேரும் கேரளாவிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அங்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது.

      ×