search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அரசு தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் அட்டைப்பூச்சி- அமைப்பாளர் சஸ்பெண்ட்
    X

    சேலம் அரசு தொடக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் அட்டைப்பூச்சி- அமைப்பாளர் சஸ்பெண்ட்

    • வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் நேரில் சென்று திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சமையறையை பார்வையிட்டு, அங்கு உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? சமையல் பாத்திரங்கள் சரியாக கழுவப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.
    • தலைமையாசிரியர் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி, சமையலர் ஜெயந்தி ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அடுத்த திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி மதிய சத்துணவு வழங்கப்பட்டது.

    அப்போது 3-ம் வகுப்பு மாணவிக்கு வழங்கிய உணவில் அட்டைப்பூச்சி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, சக மாணவிகள், ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

    இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் அட்டைப்பூச்சியை எடுத்து வீசி விட்டு அதே சத்துணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவிக்கு மறுநாள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதை அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, சுகாதாரமற்ற முறையில் சத்துணவு தயாரிப்பதாக குற்றம் சாட்டினர்.

    இந்த சம்பவத்தை அடுத்து வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் நேரில் சென்று திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சமையறையை பார்வையிட்டு, அங்கு உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? சமையல் பாத்திரங்கள் சரியாக கழுவப்படுகிறதா? என ஆய்வு செய்தார். இதையடுத்து தலைமையாசிரியர் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி (வயது 58), சமையலர் ஜெயந்தி ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.

    அதன் அறிக்கை கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் விமலாதேவியை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

    Next Story
    ×