என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை கும்பல்"

    • ஊத்துமலை பழைய போலீஸ் நிலையம் அருகே முருகேசன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.
    • ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு இவர் ஊத்துமலை பழைய போலீஸ் நிலையம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்மநபர்கள் முருகேசனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், ஒருதலை காதல் விவகாரத்தில் முருகேசனை, பக்கத்து ஊரான வீராணத்தை சேர்ந்த செல்வமுருகன்(28) என்பவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து வெட்டி–க்கொலை செய்தது தெரியவந்தது.

    3 தனிப்படைகள்

    இதையடுத்து செல்வமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கொலையாளிகள் 4 பேரும் கேரளாவிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அங்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது.

    ×