search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டணி தலைவர்கள்"

    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா இன்று இரவு விருந்து அளிக்கிறார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால், பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.



    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தேர்தல் முடிவு வெளியாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விருந்து நிகழ்ச்சியின் போது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்பாக, பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    காஞ்சிபுரத்தில் மார்ச் 1-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசுகிறார்கள். #PMModi #ADMK #BJP
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

    மாநிலம் வாரியாக சென்று அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    கடந்த மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி அப்போது தேர்தல் பிரசார கூட்டத்திலும் பேசினார். இதைத் தொடர்ந்து இந்த மாதம் (பிப்ரவரி) தமிழ்நாட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது.

    கடந்த 10-ந்தேதி பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகம் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அன்று அவர் திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார். அன்றைய தினம் புதிய நலத்திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

    இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17-ந்தேதி மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்து பிரதமர் பிரசாரம் செய்வார் என்று தகவல்கள் வெளியானது. பிறகு கன்னியாகுமரி கூட்டம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருவது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

    மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விடுவதாக பயண திட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கூட்டத்தில் பேசி முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியை காஞ்சிபுரத்துக்கு அழைத்து வர அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாவிட்டாலும் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.


    மோடி காஞ்சிபுரம் வருவதை பா.ஜனதா மூத்த தலைவர்களில் சிலர் இன்று காலை உறுதிப்படுத்தினார்கள்.

    பிரதமர் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பொறுப்பேற்று செய்ய தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மோடி பேசும் கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.

    அதுமட்டுமின்றி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எந்தெந்த கட்சி சார்பில் யார்-யார் பேசுவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    மார்ச் 1-ந்தேதிக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டை அதற்குள் முடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இன்னும் ஓரிரு தினங்களில் அதில் முடிவு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் தெரிய வரும்.

    இதையடுத்து அ.தி.மு.க- பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த வேட்பாளர்களையும் காஞ்சிபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் மேடை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பிரதமர் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. #PMModi #ADMK #BJP
    ×