search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழி"

    • ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது.
    • இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான குழி ஒன்று உள்ளது. இந்த குழி பல மாதங்களாக மூடப்படாமலேயே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இது போன்ற குழி அந்த பகுதியில் இருப்பதே தெரியாமல் உள்ளது.

    இதனால் யாரேனும் இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் குமுறல்
    • உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டு களில் சாலை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் சாலை சீர மைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள் ளது. சாலை சீரமைப் பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகிறார்கள்.

    ஆனால் இந்த சாலையின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை யில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது.சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சாலையை சீர மைக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் சாலை சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது மட்டுமின்றி 17-வது வார்டுக்குட்பட்ட மேலும் பல்வேறு சாலைகளும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சாலை களையும் சீரமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நாகர் கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்து உள்ள னர்.

    மேயர் மகேஷ் இந்த சாலை சீரமைப்பில் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர்.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    தக்கலையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கல்லங்குழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் படிக்கட்டு வரை நின்று கொண்டு பயணம் செய்தனர். பஸ் குமாரகோவில் அருகே வரும்போது அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் டிவைடர் அருகே சாலையில் உள்ள ஒரு பெரிய பாதாள குழியில் டயர் இறங்கியது. பஸ்சின் படிக்கட்டுகள் தரையில் தட்டியது. இதனால் பஸ்சின் பட்டைகள் ஒடிந்தது.

    திடீரென பஸ் ஒருபுறமாக சரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். டிரைவரின் மிதமான வேகத்தாலும், சாதுரியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பின்னர் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றிவிடப்பட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு சென்றவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னிமலை அருகே சாம்பமேடு புரவியாத்தாள் கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை அப்பகுதியில் உள்ளவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர்.
    • அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டுள்ளனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கமேடு. இங்குள்ள சாம்பமேடு என்ற இடத்தில் புரவியாத்தாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை அப்பகுதியில் உள்ளவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் அந்த குழிக்குள் பார்த்தபோது சுமார் 6 அடி அகலத்தில் அந்த குழி இருந்துள்ளது.

    அதாவது பானை வடிவத்தில் குழியின் மேல் பகுதி அகலம் குறைவாகவும், உள்பகுதி அகலமாகவும் இருந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கொடுமணல் பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டு ள்ளது. அதேபோல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியிலும் பாண்டியர்கள் வாழ்ந்ததாக கூறப்படுவது உண்டு.

    அதன்படி சாம்பமேடு பகுதியிலும் பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் நிலத்தடியில் எதையாவது சேமித்து வைப்பதற்காக பெரிய அளவிலான பானையை புதைத்து வைத்திருக்கலாம்.

    நாளடைவில் அந்த பானை உடைந்து குழி மட்டும் இருந்திருக்கலாம் என்றனர். இந்த அதிசய குழி பற்றிய தகவல் கிடைத்ததும் பாலதொழுவு ஊராட்சி துணைத்தலைவர் சத்தியபிரியா சுப்பிரமணி மற்றும் அப்பகுதி பொது–மக்கள் ஆர்வத்துடன் அந்த குழியை பார்வையிட்டனர்.

    ×