search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பாளர்"

    • மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.
    • அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி பசும்பொன் வருகை தருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதல் அமைச்சர் தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகை யில்:-

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு வந்து செல்லும் வரை இருவழியி லும் பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் திட்டமிட்ட படி கவனமுடன் செயல்பட வேண்டும். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் முன் கூட்டியே தலைமை அலு வலர்களுக்கு தகவல் தெரி வித்து, ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். முதல் அமைச்சர் நினைவிடத்திற்கு வருகை தந்து செல்லும் வரை திட்டமிட்டபடி பணி களை மேற்கொண்டு எந்த இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வரு வாய் அலுவலர் கோவிந்த ராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    • இணை ஆணையர் உத்தரவு
    • பத்மநாபபுரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த், பூதப்பாண்டி தொகுதி கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கண்காணிப்பாளர்களை அதிரடியாக இட மாற்றம் செய்து ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாள ராகபணியாற்றிய ஆனந்த், நாகர்கோவில் தேவசம் தொகுதி மற்றும் பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாள ராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப் பில் இருந்த சிவக்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடு விக்கப்படுகிறார். பத்மநாபபுரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த், பூதப்பாண்டி தொகுதி கண்கா ணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூதப் பாண்டி தொகுதியில் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த ஆறுமுக நயினார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக் கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • குரூப்-4 தேர்வு அறையில் கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கலெக்டர் வலியுறுத்துகிறார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான, முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெ ட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 24-ந் தேதி குரூப்-4 தேர்வு, அதாவது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 237 தேர்வு மையங்களில் 81 ஆயிரத்து 44 விண்ணப்பதாரர்கள்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 309 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 52 மொபைல் பார்ட்டியும் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 237 தேர்வு மையங்களுக்கும் 317 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 81 ஆயிரத்து 44 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

    தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும்.

    நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது.

    தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்-லைன் சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
    • முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இதனை இணை இயக்குநர் சங்கரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மேலும், இணையதளம் வாயிலாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்களை செலுத்துதல், அரசு உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×