search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிஎப்"

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 அடுக்கும் தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகளும், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன.
    • ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்று இருக்கும்.

    சென்னை:

    பயணிகள் ரெயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை சென்னையில் உள்ள ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்தியுள்ளது. இங்கு இந்தியாவிலேயே முதல் முறையாக 'புஷ்-புல் ரேக்' எனப்படும் நவீன வசதி கொண்ட புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் பெட்டிகளின் இரு முனைகளிலும் என்ஜின்கள் இடம்பெற்று இருக்கும். 2 என்ஜின்கள் இருப்பதால் இந்த ரெயிலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். இந்த ரெயில் குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளை கொண்டிருக்கும்.

    இதில் 3 அடுக்கும் தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகளும், 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் குலுங்காமல் செல்லும் என்பதால் பயணிகளுக்கு வசதியாக அமையும்.

    இந்த ரெயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்த ரெயிலுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த ரெயில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கொண்டிருக்கிறது. பயணிகளின் போக்குவரத்துக்கு வசதியாக நீண்ட தூர வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வந்தே பாரத் போன்ற ரெயில் பயண அனுபவத்தை சாதாரண பயணிகளுக்கு வழங்குவதை இந்த புதிய ரெயில் நோக்கமாக கொண்டு உள்ளது. இந்த ரெயில் பெட்டிகளை தொழில்நுட்ப அமைப்பினர் விரைவில் ஆய்வு செய்வார்கள். அடுத்த சில மாதங்களில் இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள இடங்களுக்கு இந்த ரெயில் விடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
    • புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை 'ஐ.சி.எப்.' நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக விரைவு ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    இந்நிலையில் பயணிகள் வசதிக்காக புதிதாக தூங்கும் வசதியுடன் கூடிய 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக பெங்களூருவில் உள்ள 'பி.இ.எம்.எல்.' தொழிற்சாலையில் இதற்கான மாடல் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரத்தில் இந்த மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகிறது. மாதிரி வடிவம் அந்த ரெயில் ஒப்புதலானவுடன், 'வந்தே பாரத் சிலீப்பர்' புதிய ரெயில்கள் தயாரிக்கப்படும்.

    'வந்தே பாரத்' படுக்கை வசதியுடன் கூடிய புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 'பெல்' திட்டாக் தொழிற்சாலையில் இந்த ரெயில் பெட்டிக்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது. ஐ.சி.எப். கூட்டு முயற்சியுடன் 80 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் இதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஐ.சி.எப். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இந்த புதிய ரெயிலில் ஏ.சி. 2-வது வகுப்பு, ஏ.சி. 3-வது வகுப்பு, பெட்டிகள் அமைக்கப்படுகிறது. 10 புதிய ரெயில்கள் ரூ.675 கோடியில் தயாரிக்கப்படுகிறது.

    ஏ.சி.3-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் அழகிய உயர்தர வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அகலமான ஜன்னல், மின்விளக்கு வசதியுடன் சிறப்பாக உலகதரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

    மேல் படுக்கைக்கு பயணிகள் எளிதில் செல்ல 6 படி ஏணிகள் அமைக்கப்படும். இது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் வீதம் உருவாக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது.
    • முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கக் கூடிய "வந்தே பாரத்" அதிநவீன சொகுசு ரெயிலை சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம் தயாரிக்கிறது.

    இதுவரையில் இயக்கப்பட்டுள்ள 25 வந்தே பாரத் ரெயில்களும் இங்கு தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

    முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் பெட்டிகளை தயாரித்து வருகிறது

    இந்நிலையில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் சாதாரண வந்தே பாரத் ரெயிலை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    அதற்கான டிசைனை வடிவமைக்கிறது. இந்த ரெயிலுக்கு "வந்தே பாரத் சாதாரன்" அல்லது "வந்தே அந்தியோதயா" என்று பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு இல்லாத பொது பெட்டியாக இருந்தாலும் கூட இந்த ரெயிலில் பல்வேறு வசதிகளை செய்ய ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. ஏ.சி. வசதி இல்லாமல் என்னென்ன பிற வசதிகளை இப்பெட்டியில் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    வந்தே பாரத் சாதாரண ரெயிலில் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஐ.சி.எப். குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ரெயிலில் 8 பெட்டிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யவும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 12-ம், ரெயிலின் இறுதியில் 2 பக்கமும் என்ஜினும் நிறுவக்கூடிய வகையில் விரைவில் டிசைனை உருவாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயில் நிறுத்தக்கூடிய பிளாட்பாரத்தில் நிற்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தருவதோடு உள் அலங்காரமும் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் முன்பதிவு இல்லாத வந்தே பாரத் ரெயில் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 25-வது வந்தே பாரத் விரைவு ரெயில் பெட்டியை ஐ.சி.எப். உருவாக்கி உள்ளது.
    • இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

    சென்னை:

    இந்தியாவின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பினால் வடிவாக்கம் செய்யப்பட்டு சென்னை ஐசிஎப் நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இந்திய ரெயில்வேயினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளிலெல்லாம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைத்து வந்தே பாரத் ரெயில்களும் சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையிலேயே கட்டமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ஐசிஎப்பில் 25வது வந்தே பாரத் விரைவு ரெயில் பெட்டி உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.எப். நிறுவன பொது மேலாளர் பி.ஜி.மால்யா கூறுகையில், இந்த அதிநவீன ரெயில் பெட்டி அனைத்து இந்தியர்களின் இதயத்தையும் கவர்ந்துள்ளது. உங்களின் தளராத முயற்சியினால் இன்று நமது நிறுவனம், 25வது வந்தே பாரத் ரெயில் பெட்டியை உருவாக்கி உள்ளது. இதை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரெயில் போபாலுக்குச் செல்கிறது என தெரிவித்தார்.

    இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

    ×