search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Model Form"

    • 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
    • புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை 'ஐ.சி.எப்.' நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக விரைவு ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    இந்நிலையில் பயணிகள் வசதிக்காக புதிதாக தூங்கும் வசதியுடன் கூடிய 'சிலீப்பர்' சீட்டுகள் அமைக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் தயாரிக்க 'ஐ.சி.எப்.' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக பெங்களூருவில் உள்ள 'பி.இ.எம்.எல்.' தொழிற்சாலையில் இதற்கான மாடல் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரத்தில் இந்த மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகிறது. மாதிரி வடிவம் அந்த ரெயில் ஒப்புதலானவுடன், 'வந்தே பாரத் சிலீப்பர்' புதிய ரெயில்கள் தயாரிக்கப்படும்.

    'வந்தே பாரத்' படுக்கை வசதியுடன் கூடிய புதிய 10 ரெயில்கள் தயாரிக்க ரூ.675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 'பெல்' திட்டாக் தொழிற்சாலையில் இந்த ரெயில் பெட்டிக்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது. ஐ.சி.எப். கூட்டு முயற்சியுடன் 80 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் இதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஐ.சி.எப். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இந்த புதிய ரெயிலில் ஏ.சி. 2-வது வகுப்பு, ஏ.சி. 3-வது வகுப்பு, பெட்டிகள் அமைக்கப்படுகிறது. 10 புதிய ரெயில்கள் ரூ.675 கோடியில் தயாரிக்கப்படுகிறது.

    ஏ.சி.3-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் அழகிய உயர்தர வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. அகலமான ஜன்னல், மின்விளக்கு வசதியுடன் சிறப்பாக உலகதரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

    மேல் படுக்கைக்கு பயணிகள் எளிதில் செல்ல 6 படி ஏணிகள் அமைக்கப்படும். இது பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் வீதம் உருவாக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×