search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் கொலை"

    • வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது
    • போதை வாலிபர்கள் கல்லால் தாக்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாபதி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 50), என்ஜினியர். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியில் கிடைத்த வேலையை செய்து வந்தார்.

    இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (26) மற்றும் சூர்யா (25) ஆகியோர் ரேசன் கடை எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாடினர்.

    வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது.

    இதனால் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கும், போதை வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் கோபாலகிருஷ்ணை முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கற்களால் தாக்கி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற தமிழ்வாணன் மற்றும் சூர்யா ஆகியோர் மீதும் கல் வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த தமிழ்வாணன், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின்குமார், மவுரீஸ், நித்திஷ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார்.
    • போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 47). என்ஜினீயரான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது ஓழுங்கினத்தால் அந்நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் ஊருக்கு வந்து விட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். 2 பேரும் கருத்து வேறுபாட்டால் விஜயராகவனை பிரிந்து சென்றனர்.

    பின்னர் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவரது வீட்டின் அருேக கழுத்து மற்றும் வயிற்று பகுதி அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதில் கொலை குறித்து உடனடியாக துப்பு துலங்கியது.

    விஜயராகவனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சோமசுந்தரம் (60) என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், விஜயராகவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    அதில் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம் போல் நேற்று மதியம் என் வீட்டின் அருகில் அமர்ந்து இருவரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார். நான் அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் ஆபாச அர்ச்சனையை அவர் விட வில்லை. இதில் பொறுமை இழந்த நான்

    கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார். போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள்.
    • வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    காரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் சுகந்தா ஆச்சார்யா (வயது34). கம்ப்யூட்டர் என்ஜினீயர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் ஸ்குருடிரைவர் குத்திய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரை யரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து சுகந்தா ஆச்சார்யாவின் நண்பர்கள் யார்? யார்? அவரது வீட்டுக்கு கடைசியாக வந்தவர்கள் யார்? வேலை பார்த்த இடத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • செந்தில்குமார் தனது தாய் பாப்பாத்தியிடம் மது குடிக்க பணம் கேட்டார்
    • முத்துக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது அண்ணன் செந்தில்குமாரின் வயிற்றில் குத்தினார்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மாச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் மது மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானார்.

    செந்தில் குமார் தனது மாமா சீனிவாசன் என்பவரது வீட்டில் தனது தாய் பாப்பாத்தி, சித்தி ராணி தம்பி முத்துக்குமார்(28) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் தினசரி மது குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    நேற்று செந்தில்குமார் தனது தாய் பாப்பாத்தியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாயை தாக்கினார்.

    இதனை பார்த்த அவரது தம்பி முத்துக்குமார் தடுத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது அண்ணன் செந்தில்குமாரின் வயிற்றில் குத்தினார். நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த செந்தில்குமாரின் மாமனார் சீனிவாசன், தாய் பாப்பாத்தி, சித்தி ராணி மற்றும் தம்பி முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தாயை தாக்கிய ஆத்திரத்தில் செந்தில்குமாரை குத்தி கொலை செய்ததாக அவரது தம்பி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரில் வசித்து வந்தவர் உமேந்தர்(வயது33). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் உமேந்தர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். மாலையில் அவர்கள் மாமல்லபுரம் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஓலா அப் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    வணிக வளாகம் முன்பு கார் வந்ததும் முன்பதிவுக்கான ஓ.டி.பி. எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ரவியை கைது செய்தனர்.

    இவரது சொந்த ஊர் சேலம் ஆத்தூர் ஆகும். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    உமேந்தர் தன்னுடன் வந்த மனைவியின் அக்காள் தேவிப்பிரியாவின் செல்போனில் இருந்து காரை முன்பதிவு செய்து இருந்தார். காரில் அனைவரும் ஏறியதும் டிரைவர் ரவி ஓ.டி.பி எண்ணை கேட்டு அவசரப்படுத்தினார்.

    அப்போது உமேந்தர் தனது செல்போனில் ஓ.டி.பி எண்ணை தேடி தடுமாறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த டிரைவர் ரவி கடுமையான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் சவாரியை கேன்சல் செய்யும்படி கூறிவிட்டு காரில் இருந்து இறங்கினர். அப்போது காரின் கதவை உமேந்தர் வேகமாக மூடியதாக கூறப்படுகிறது.

    இதனால் டிரைவர் ரவிக்கும், உமேந்தருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உமேந்தர் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் தாக்க முயன்றபோது தடுத்த டிரைவர் ரவி தனது கையில் இருந்த செல்போனால் அவரது தலையில் காது ஓரத்தில் பலமாக குத்தினார்.

    இதில் நிலைகுலைந்த உமேந்தர் கீழே விழுந்ததும் அவரது மார்பில் பலமுறை எட்டி உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த உமேந்தர் இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    மனைவி, குழந்தைகள் கண்முன்பே உமேந்தர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டு அவர்கள் துடித்து போய் உள்ளனர்.

    சாதாரண வாக்குவாதத்தில் ஆத்திரம் கண்ணை மறைத்ததால் இந்த கொலை நடந்து உள்ளது. இதனால் என்ஜினீயரின் குடும்பமே நிலைகுலைந்து போய் இருக்கிறது.

    • தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர்.
    • அப்போது டிரைவரான ரவி ‘ஓ.டி.பி.’ எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்போரூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உமேந்தர் வார இறுதி நாட்களில் கோவையில் இருந்து வருவது வழக்கம்.

    நேற்று காலை உமேந்தர் தனது குடும்பத்துடன் வாடகை காரில் முட்டுக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். அவர்களுடன் உறவினரான தேவிபிரியாவும் சென்று இருந்தார். அவர்கள் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொழுது போக்கு மையத்தில் இருக்கும் தியேட்டரில் படம் பார்த்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக வாடகை காரை ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.

    தியேட்டர் முன்பு வாடகை கார் வந்ததும் உமேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதில் ஏறினர். அப்போது டிரைவரான ரவி 'ஓ.டி.பி.' எண்ணை கேட்டார். இதில் உமேந்தருக்கும் கார் டிரைவர் ரவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த உமேந்தரும், அவரது குடும்பத்தினரும் காரை விட்டு இறங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் ரவி சரமாரியாக உமேந்தரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் உயிருக்கு போராடிய உமேந்தரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உமேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் கார் டிரைவர் ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்பத்தினர் முன்பே என்ஜினீயர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×