search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல் பட்டியல்"

    • காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது.
    • மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை.

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த, கச்சத்தீவை தாரை வார்த்த, என தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போதே இந்த சட்டத்தை தி.மு.க. தடுத்து இருக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகிற கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?. வருகிற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் இடங்களில் தி.மு.க. நேரடியாக களம் இறங்குவதாக முடிவு எடுப்பார்களா?.

    மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை. எனக்கு தெரிந்து புரட்சி தமிழர் என்றால் நடிகர் சத்யராஜை தான் அப்படி அழைப்போம்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி கொண்டு இருக்கிறோம். எங்கள் கொள்கை முடிவுப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கையை ஏற்று யாராவது கூட்டணிக்கு வந்தால் கூட்டணி வைப்பது குறித்து பார்க்கலாம்.

    அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரூ.20.86 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி மற்றும் ரூ.18 கோடி மதிப்பில் உயர் மின் கோபுர தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக 1,135 முகாம்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர் என்றார்.

    அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. பைல்ஸ்-2 வெளியிடுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியலைத்தான் வெளியிடுகிறாரே தவிர, ஊழல் பட்டியல் இல்லை. எனினும் அதனை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

    அப்போது செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , கலெக்டர் கிறிஸ்துராஜ் , ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

    அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.

    எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.

    மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.

    ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.

    • என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
    • அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பா.ஜனதா கட்சியை 420 கட்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது:

    உதயநிதி ஸ்டாலினை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் தகுதி என்ன? படிப்பு என்ன? அவர் எங்கு போய் என்ன கஷ்டப்பட்டார்? அவர் யாரிடம் போய் என்ன பேசினார். மக்கள் அவரது திறமைக்கு ஓட்டு போட்டார்களா? சேப்பாக்கம் தொகுதி என்பது தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெறும் தொகுதி. யாரை நிறுத்தினாலும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய தொகுதி அது.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் 'நீட்' பற்றி பேசுகிறார். அவருக்கு நீட் பார் முலாவை சரி செய்யத் தெரியுமா? கேட்டால் அண்ணா பல்கலைக்கழக செனட் மெம்பர் என்கிறார்.

    தமிழகத்தில் ஒரு காலத்தில் வல்லுனர்கள் கருத்து சொல்லும் நிலை இருந்தது. ஆனால் இன்று கருத்து கந்தசாமிகளாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் பேசுகிறார்கள்.

    பி.ஜே.பி.யை 420 கட்சி என்கிறார். நான் திரும்ப பதில் சொன்னால் அது வேற மாதிரி ஆகிவிடும். அது நன்றாக இருக்காது. முதலில் யார் 420 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

    நான் சொன்ன மாதிரி ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் எனக்கு வரும். நான் சொன்ன கணக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சொல்லி உள்ளேன். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும்.

    எனவே ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த சொத்து பட்டியல் முழுவதும் இணைய தளத்தில் வெளியிடுவோம். அதன் நகல் பென்டிரைவில் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும்.

    எனது 10 ஆண்டு வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்தும் அதில் வரப் போகிறது. அதை பார்த்ததற்கு அப்புறம் 420 யார் என்று தெரியும். அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×